Saturday, September 21, 2019

115. மனம் கனிந்தே பாடிடுவோம்(ஜகம் புகழும்)


KARAOKE aligned

மனம்கனிந்தே பாடிடுவோம் சாயிசரிதமே 
அதன் அருள்மழையில் உயர்ந்துவிடும் கேட்குமிதயமே 
(2)
மனம்கனிந்தே பாடிடுவோம் சாயிசரிதமே..
ஹா..ஹா..

உலகத்தில் நாமெல்லாம் சிறப்புறத்தானே 
வந்த இறைவடிவம் நம்சாயிராம் 
நமக்கென நாளெல்லாம் புரிந்தனன் சேவையே (2)
அதுவே அன்பான காவியம் ஆகும்   
மனம் கனிந்தே பாடிடுவோம் சாயிசரிதமே 
அதன் அருள்மழையில் உயர்ந்துவிடும் கேட்குமிதயமே 
மனம் கனிந்தே பாடிடுவோம் சாயிசரிதமே 
(SM)

அன்றொருநாள் வெங்கவதூதரின் அருந்தவத்தால்
 மனம்-மகிழ்ந்த ஆண்டவன் நரன்-எனவே பிறப்பெடுக்க 
முடிவெடுத்தார் உலகினில் இந்த கலியிலே .
திருவுள்ளப் படியே அவதரித்தார் சாயி 
ஹா..ஹா..
ஈஸ்வரி பெற்றிட பர்த்தியில் திருமகன்
பிறந்ததும் இசையும் எழுந்தது அழகாய்த் தானே 
பர்த்தியில் தோன்றிய-கொடும் வ்யாதியைப் போக்கவே 
கிண்கிணி நாதபஜனையை நடத்தினனே (2)

பாட்டனார் கொண்டமரும் தனிமையில் வாழவே
அவருக்குச் சேவைசெய்து அருள் புரிந்தனனே 
(2)
பர்த்தியின் சிறுவர்கள் நல்லதைக் கேட்கவே (2)
சிறுவனாம் சத்தியத்தை நாடிச்சென்றனரே 
(MUSIC)
பர்த்தியின் நித்திலம் சத்ய-சாயி நாதன் 
நீதியை வயதை-மீறும் விதத்திலே சொன்னான் 
(2)
காலமெலாம்-நீங்கள் அன்புளம் கொள்ளுங்கள் (2)
வெஞ்சின சொல்விடுத்து நல்லறம் புரிவீர் 
ஆத்திரத்தால் அறிவிழந்த தந்தைபார்க்க 
மல்லிகையால் பேரை சொல்லி சத்யம் விந்தை செய்தான் 
அரும் புதல்வன் அற்புதம் கண்ட தந்தை அளவில்லாதான மரி யாதைகொண்டான் ..
ஆஆஆ..
மனம்கனிந்தே பாடிடுவோம் சாயிசரிதமே 
அதன் அருள்மழையில் உயர்ந்துவிடும் கேட்குமிதயமே 
மனம்கனிந்தே பாடிடுவோம் சாயிசரிதமே
(MUSIC)
PART 2
அற்புதம் புரிந்திடும் சாயீ  நாதனுக்கு 
பைத்தியம் பிடித்ததாய்ப் பொய் உரைத்தாரே.. ..ஆஆஆ..
அற்புதம் புரிந்திடும் நம்சாயிநாதனுக்கு 
பைத்தியம் பிடித்ததாய்ப் பொய் உரைத்தாரே.. 
உறவினர் யாவரும் பித்துடை அறிவிலே பேயை மந்திரத்தால் விரட்ட சொன்னாரே 
(VSM)
உறவினர் போதனையால் மனம்மாறி அவன்-தந்தை
உடனொரு மந்திரனின் உதவி-நாடவும் 
உடனே பாதகன் புதிதாய்-மந்திரம் 
சொல்லிப்-பல்லுபாதைகளை ஸ்வாமிக்குத் தந்தான்  
(MUSIC)
மந்த புத்தி கொண்ட மந்திரன்  மரண உபாதை தந்த பின்னர் 
தந்தையினை அழைத்து சொன்னான்
இந்த முறை பேய்போக-ஆணி தலையில் அடித்திடணும்-நன்றாய் என்றான்

சஞ்சலம் இல்லாமல் நம்-சா..யீசனும்  சம்மதம் தானே-என உவந்து சொன்னான்
மிஞ்சிய கோபத்தால் வெகுண்டே உடனெழுந்த தமக்கையின் கோபத்தை சாந்தமாக்கினான்

நிலவெனும் சாயிமுகம் தழல்-போல் ஒளிரவே 
தலையினில் பாவி-ஆணி அடிப்பதைக் கண்டு 
(2) 
ஆஆஆ..(in parallell ஆஆஆ in chorus)
கலங்கி ஓடிவந்து கண்ணீர் சிந்தியே.. ஆஆஆ..(2)
வரவில்லை ஒருவர் கூட தடுத்திட அன்று 

(in parallell ஆஆஆ in chorus available in KARAOKE)

ஆறெனப் பெருகிடும் குருதியில் சாயி 
அன்புடன் அவர்களையும் அணைத்துக்   கொண்டானே 
 தன்-தந்தை சொன்னதைக் கேட்டுப்-பின் 
தன்னுடல் 
வதைப்பிலும் சாயிபிரான் சிரித்து நின்றானே 

மனம்கனிந்தே பாடிடுவோம் சாயிசரிதமே 
அதன் அருள்மழையில் உயர்ந்துவிடும் கேட்குமிதயமே 
மனம்கனிந்தே பாடிடுவோம் சாயிசரிதமே
(SM)
எங்கும்-நிறை இறைவன் நம்மில் இருந்த-அவன் 
அன்பால்-யாவருக்கும் தந்தையாகினான்  
(2)
நல்ல கதி-கொள்ளும் பாதையைக்-காட்டினான் (2)
தன்கரம்-கொண்டே-சேவை செய்து-காட்டினான்
தன்கரம்-கொண்டே-சேவை செய்து-ஊட்டினான்

நேரம்வரத் தந்தை தனியிடத்தில்-அமர்ந்தே
தன்னவதார-நோக்கம் அறியச்சொன்னான்
(2)
சோகம் கொண்ட-ஊரார் பேரன்பாலவன் 
போக-வேண்டாம் என்று வேண்டி நின்றார் 
(SM)
நெஞ்சத்தின் வேதனையால் அழுத-கண்ணாகிய  
ஈஸ்வரி-அன்னையைத் துறந்து சென்றான் 
(2)
நெஞ்சம்-கனலாக ...கண்கள்-புனலாக ..
அன்புமகன் சென்றதால் வாடி-நின்றாள்
ஈஸ்வரி வாடி-நின்றாள் 
(MUSIC)
பர்த்தியிலே தன்மனத்தால் அன்பு மழை சொரிந்தான் 
ஓய்வு ஒழிவு இல்லாமல் சேவை புரிந்தான்
ஊழியைத் தாண்டியே இருந்துவளர் பெருமான் மண்ணிலே நம்சோகம் போக்கஇருந்தான் .. ஆஆஆ..
(SM)
ராம-ஸ்வாமியின் வடிவம்-நானடா மானிடா என்றான் 
(2)
நானே கண்ணன்-யேசு புத்தஜொராஷ்டிர வடிவங்கள் என்றான் 
ஒன்றே-யாவரும் ஒன்றே-மதமும் அன்புருவே என்றான் 
மனதில்-புகுந்து சாயி-பற்பல மாற்றங்களைச் செய்தான்
ஸ்வாமி அற்புதங்கள் செய்தான் 
(MUSIC)
சுபீக்ஷங்களை நன்கே-தந்தான் தாயெனவே நின்றான் 
தெய்வ-மாதா ஈஸ்வரி-வேண்ட மருந்தகத்தைத் தந்தான்..ஆஆஆ..

அன்பின் வடிவாய்க் கனிவுடன்-நின்று நம்சாயி-உலகாண்டான் 
(2)
கலங்கியமக்கள் களிப்புறசாயி அன்புருவாய் நின்றான் 
அன்புருவாய் நின்றான் 
ஆஆஆ..

மனம் கனிந்தே பாடிடுவோம் சாயிசரிதமே 
அதன் அருள்மழையில் உயர்ந்துவிடும் கேட்குமிதயமே 
மனம் கனிந்தே பாடிடுவோம் சாயிசரிதமே 

ஸ்ரீசாயிராமம் ..
சிறந்த -தாயெனக் காக்கும்-தெய்வம் 
ஸ்ரீசா..யிராம் ரத்னாகரகுலம் வந்ததீபம் 
ஆறாததுயரம் அவன்முகம் -காணப் போகும் 
நாளும் உலாவி-நல் தரிசனம்-தரும் 
 நம்-ஸ்வாமி...





No comments:

Post a Comment