Wednesday, March 4, 2020

133. ஜோஜோ கண்ணேசாயி (ஜோ அச்சுதானந்த ராகம்-நவரோஜ்)



ஜோஜோஎன்கண்மணியே கண்ணுறங்கு சாயி
ரத்னா..கரகுலமுதித்த மணிவிளக்கு நீயே
(2)
ஜோஜோ..
(MUSIC)
அன்றுதுனி வந்தஉதி தந்தனையே பாபா 
பங்காரு என்றிடு பாரில்பே..ரன்பாய் 
(2)
தூங்குநீ இவ்வுலகு வந்துதுதித்த நாதா 
தூங்கிடாய் நன்றாக அன்பு-அவதாரா 
ஜோஜோ.
(MUSIC)
கோவர்த்தனம் தன்னை குடையுமாய் ஏந்தி 
காதகனுமாய்இருந்த கம்சனைவ..தைத்து 
(2)
மோரும் தயிருடனும்நல்ல வெண்ணைகொண்டசட்டீ 
உடைத்தகோ..விந்தனும் நீ ஈஸ்வரியின் சட்டீ
ஜோஜோ.
(MUSIC)
தூங்குவாய் சாயிமா கண்ணை மெல்ல மூடாய்
சிங்கார கதைகள்-நான் சொல்லுவேன் கேளாய்
(@)
சங்கநிதி பதுமநிதி எங்களுக்கு நீயே 
எங்கள்விதி மாற்றவந்த பர்த்திபுரி தாயே  ஜோஜோ..
ஜோஜோஎன்கண்மணியே கண்ணுறங்கு சாயி 
ரத்னா..கரகுலமுதித்த மணிவிளக்கு நீயே
ஜோ..ஜோ   ஜோ..ஜோ  ஜோ..ஜோ



No comments:

Post a Comment