Wednesday, March 4, 2020

134. பாயுமினி மேலெதற்கு (பாயுமொளி நீ எனக்கு)


பாயுமினி..மேலெதற்கு .. தூக்கமில்லையே எனக்கு (2)
ஓய்ஒழிவு..மேஎதற்கு .. துன்பமினி மேலெனக்கு
சாயுலகத்துறையவில்லை ..  ஏனுமிந்த வாழ்க்கையும்தான்
மாயமிடர் போக்கிடவே .. யாருமில்லையே சாயிமா
(2)
தாயின்மடி போனபின்பு  ..  கேவும்குரல் தான்எனக்கு
(2)
வாழ்வும்விட..மே-எனக்கு .. இனிஉயிரும் ஏன்எதற்கு 
(2)
வாழ்வில்இதம் சேர்க்குமுந்தன் அன்பினொளி வீசினையே
(2)
மானுடத்தில் பேசிடவே .. நீ-இங்கில்லையே சாயிமா 
(2)
நீ-இங்கில்லையே சாயிமா

சாதலளி நீ-எனக்கு..சாந்தமது..வேஎனக்கு
வேதமென ஒளிர்ந்தனையே வித்தைஎன ஒளிந்தனையே
(2)
சோகமொரு ஆறெனவே .. பொங்கிவரும் போதினிலே 
(2)
தேற்ற-உனைக் காண்கிலேனே .. என்னுயிரே சாயிமா 
(2)
தாக்குமிடி..யே-எனக்கு .. நிம்மதியு..மா-உனக்கு (2)
தாங்கும்படி..யாஇருக்கு .. வெற்றி-இது..வாஉனக்கு
(2)

தாரணியில் வா-உடனே .. வாழ்ந்திருக்கும் உருவமுமாய்
உனை-அருவ..மாய்-உணர .. திறனில்லையே சாயிமா 
(2)




No comments:

Post a Comment