சாயீசனிகம் தந்தையாய் வந்த பின்பும்
சாயீசனிகம் தந்தையாய் வந்த பின்பும்
சாயுஜ்யம் எனும்பாக்யம் வேறோ இருக்கும்
(3)
Music
சாயிராம் அருள்நயனம் குமுதப்-பூ ஆகும்
அது-பார்க்க வினைவிலகும் மகிழ்ந்து மனம்பொங்கும்
(2)
நல்கதி யளிக்கும் அதி உன்னத மளிக்கும்
சிரசோதயமாகிக் கருணா ரசம்சிந்தும்
(2)
சாயீசனிகம் தந்தையாய் வந்த பின்பும்
சாயுஜ்யம் எனும்பாக்யம் வேறோ இருக்கும்
(music)
(music)
சங்கீதம் அவன்குரலில் அமுதச் சொல்லாகும்
தினமு மதனைச் சுவைக்கக் காதுகளும் ஏங்கும்
(2)
அவன்பாசம் அதில் ஊற தீமதியும் போகும்
சொல்லொணா-ஆனந்தம் -அடடா அந்த-நேசம்
(2)
சாயீசனிகம் தந்தையாய் வந்த பின்பும்
சாயுஜ்யம் எனும்பாக்யம் வேறோ இருக்கும்
(MUSIC)
(MUSIC)
ஆசையாய் அன்பு மன-சேவைதனைப் புரிவாய்
மாசிலா அறு-கால பூஜையது அறிவாய்
(2)
சொல்லுவாய் அவன்நாமமதை நெஞ்சுருகக் கனிவாய்
சேராயவன்-பாதம் அதைத்-தஞ்சம் மனிதா
(2)
சாயீசனிகம் தந்தையாய் வந்த பின்பும்
சாயுஜ்யம் எனும்பாக்யம் வேறோ இருக்கும்
(2)
No comments:
Post a Comment