Saturday, April 18, 2020

615. நான்-வாழ வழிகாட்டும் என்-தந்தை(குரு பாதுகா ஸ்தோத்ரம்) ** ஆத்மார்ப்பண சரணாகதி



Thanks to Radio SAI for Karaoke
 (KARAOKE is  for 9 stanzas Reduced to 6 stanzas for this song (First  three and last three of original)

ஆத்மார்ப்பண சரணாகதி 


(MUSIC)
நான்-வாழ வழிகாட்டும் என்-தந்தை சாயி
பேரன்பில் மடி-காட்டும் என் தாயும் நீயே
என்-மாய இருள்போக்க குருநாதன் நீ-தான்
எல்லாமும் நீயன்றோ என்-சாயி நாதா 
உனையன்றி வேறில்லை ஸ்ரீ சாயிநாதா 
(MUSIC)
நான்-என்ன செய்தாலும் உன்னாற்றலால்-தான்
நான்-பெற்ற எல்லாமும் உனக்காகவே தான் 
நீயே-என் நல்-புத்தி ஹே-பர்த்தி நாதா
எல்லாமும் நீயன்றோ என்-சாயி நாதா 
உனையன்றி வேறில்லை ஸ்ரீ சாயிநாதா 
எல்லாமும் நீயன்றோ என்-சாயி நாதா
(MUSIC)
விடாதிருக்கும் வல் வினையென்று-சொல்வார்
சதா உந்தன்-நாமம்-அவ் வினை வெல்லும் என்பார் 
அது கூட நீ காட்டும் அருளாலே என்பார்  
எல்லாமும் நீயன்றோ என்-சாயி நாதா 
உனையன்றி வேறில்லை ஸ்ரீ சாயிநாதா 
(MUSIC)
உடலென்ற தேரோடத் தேரோட்டி நீதான்
படகாக சம்சாரக் கடல்-தாண்ட நீதான்
புகலாக நான்-சேரப் பதம்-காட்டும் நாதா 
எல்லாமும் நீயன்றோ என்-சாயி நாதா 
உனையன்றி வேறில்லை ஸ்ரீ சாயிநாதா 
 (MUSIC)
நில்லா ப்ரபஞ்சத்தில் எல்லாமும் நீதான்
எண்ணால் அடங்காத உள்-யாவும் நீதான் 
என்-ஆத்ம ரூபத்தின் உள்-ஜோதி நீதான்
எல்லாமும் நீயன்றோ என்-சாயி நாதா 
உனையன்றி வேறில்லை ஸ்ரீ சாயிநாதா 
எல்லாமும் நீயன்றோ என்-சாயி நாதா 
(MUSIC)
தானாக மண்-வந்த அவதாரம் நீதான் 
தீராத உன்-ப்ரேமை பெயரான நாதா
கேளாமல் அருள் செய்யும் ஹே-தீன நாதா 
எல்லாமும் நீயன்றோ என்-சாயி நாதா
உனையன்றி வேறில்லை ஸ்ரீ சாயிநாதா 




No comments:

Post a Comment