Monday, April 20, 2020

149. ப்ரணவம் எனவும் புவனம் முழுதும்(அதரம் மதுரம்)



ப்ரணவம் எனவும் ப்ரபஞ்சம் முழுதும் (2)
பயணம் புரியும் எதிலும் நிறையும் (2)
ஹ்ருதயம் விளங்கும் ஆன்மம் ஒளிரும் (2)
சாயிராம் எனும்தேன் நாமம் ஜபிப்போம் (2)
விசனம் விலகும் சிரிப்பும் உதிரும் (2)
வசனம் முழுதும் இனித்தே உதிரும் (2)
சலிக்கும் மனதும் களித்தே நிமிரும் (2)
சாயிராம் எனும்தேன் நாமம் ஜபிப்போம் (2)
மேலோர் பணியும் மேலாய் விளங்கும் (2)
ஓமின் நாதமாய் நாமம் ஆகும் (2)
நித்யம் விளங்கும் சத்யம் அதுவும் (2)
சாயிராம் எனும்தேன் நாமம் ஜபிப்போம் (2)
நீசம் விலகும் பாசம் விளங்கும்  (2)
கோபம் விலகும் நேசம் விளங்கும்  (2)
பாபம் விலகும் துலங்கும் ஒளியும்  (2)
சாயிராம் எனும்தேன் நாமம் ஜபிப்போம் (2)
சரணம் சரணம் சரணம் சரணம்  (2)
சரணம் எனவும் உருகும் மனதும்  (2)
பணிவும் துணிவும் சேர்ந்தே வழங்கும் (2) 
சாயிராம் எனும்தேன் நாமம் ஜபிப்போம் (2)
பஞ்சாய் ம்ருதுவாய் கானாம் ருதமாய் (2)
தெவிட்டா அமுதா மதன்தீஞ்சொல்லால் (2) 
இதயம் விளங்கும் கமலம் மலரும்  (2)
சாயிராம் எனும்தேன் நாமம் ஜபிப்போம் (2)
தனிப் பேரொளியாய் வரும்பாரழகாய்  (2)
அதிலே வினையின் இருளும் விலகும் (2)
இஷ்டம் அருளும் கஷ்டம் விலகும் (2)
சாயிராம் எனும்தேன் நாமம் ஜபிப்போம் (2)
பெரும்பார் வடிவாய் யாவும் அதுவாய்  (2)
சிருஷ்டிப் பதுவாய் சிருஷ்டித் ததுவாய்  (2)
நாமம் விளங்கும் அதுவே ப்ரணவம்  (2)
சாயிராம் எனும்தேன் நாமம் ஜபிப்போம் (3)
சாயிராம் சாயிராம் சாயிராம் சாயிராம் சாயிராம் சாயிராம்
சாயிராம் ராம் ராம் சாயிராம் ராம் ராம் 
சாயிராம் சாயிராம் சாயிராம் சாயிராம் சாயிராம் சாயிராம்






No comments:

Post a Comment