Thursday, April 30, 2020

272. சாயி வருகின்றான்(கண்ணன் வருகின்ற நேரம்)


சாயி வருகின்றான் பாரீர் (2) எங்கள் சாயி வருகின்றான் பாரீர் (2)
உலகீரே .. அதை நெஞ்சில் பதித்..திடு..வீரே 
எங்கள் சாயி வருகின்றான் பாரீர் உலகீரே..அதை நெஞ்சில் பதித்திடுவீரே 

எங்கும் காணக்கிடைக் காதக்கவின் காட்சிக்குமை ஆளாக்கிட
அவதாரம் எடுத்தானே பாரில்
(2)
இந்த பூமிஎல்லாம் சென்று கூறீர் (2)
எங்கள் சாயி வருகின்றான் பாரீர் உலகீரே..அதை நெஞ்சில் பதித்திடுவீரே 
சஞ்ச..லங்..கள்சென்று ஓடும்

சஞ்ச..லங்..கள்சென்று ஓடும்
கவிபாடும் மனம் பொங்கிப்பொங்கி மகிழ்ந்தாடும் 
(2)
என்று நடமாடிடும் சாயீசனின் பாதங்களைத் தொடுவோம்என 
எண்ணிஎண்ணி அதுவாடும் புகல் தேடித்தேடி அதை நாடும் 
(2)
எங்கள் சாயி வருகின்றான் பாரீர் உலகீரே..அதை நெஞ்சில் பதித்திடுவீரே சாயீசன் தேனூறும்-சொல்லை

எங்கள்-சாயீசன் தேனூறும்-சொல்லை சிந்தும்-கிள்ளை 
அதைக் கேட்டதும் மனம்போகும் கொள்ளை
(2)
அதுஅமுதோ அல்லஎதுவோ அதுபோலொரு சுவைஅருமை 
இந்த லோகத்தில் எங்கணும் காணேன்
என்றும்-நெஞ்சி..னிக்கும்அந்த சொல்லே
(2)
என்றும்-நெஞ்சி..னிக்கும்அந்த சொல்லே
எங்கள் சாயி வருகின்றான் பாரீர் உலகீரே..அதை நெஞ்சில் பதித்திடுவீரே அந்தசாயி பிரான்-நின்று-நோக்கும் நம்மைப் பார்க்கும் 
ஏமி ஏமிஎன்றே நம்மைக்கேட்கும் 
அந்த மொழிகேட்டிட பதம்தொட்டிட மனமே துடித்திடுமாதலால் 
சென்றுஅவன் அடிசேர்வோம் அந்த-சத்தியத்..தின்மடி சேர்வோம் 
எங்கள் சாயி வருகின்றான் பாரீர் உலகீரே..அதை நெஞ்சில் பதித்திடுவீரே 

நாமாவளி
 (கோவிந்தகோவிந்த ராதாமுகுந்தா)

சாயீச..சாயீச சாயீச..ஈசா
சாயீச..ஈசா சாயீச..சாயீச


பக்தஜன மனமோகன சுந்தரசாயி மூர்த்திக்கி - ஜெய்







No comments:

Post a Comment