Saturday, April 25, 2020

307. தித்திக்கும் (என்ன புண்ணியம் செய்தேன்)

தித்திக்கும் பொருள்ஏதும் சாயீசன்-திருநாமம் ஒன்றினைப்-போல் உண்டோ
தீங்கனியோ தேனோ தெவிட்டாத தீந்தமிழோ
விள்ளவும் முடியாத தேவமுதோ அம்மா
தித்திக்கும் பொருள்ஏதும் சாயீசன்-திருநாமம் ஒன்றினைப்-போல் உண்டோ
உலகமெங்கும் கிடைக்கும் இனிப்பை-ஓர் உருவாக்கி
உண்ணவும் நீ முயன்று-செய்தால் சாயி நாமம் ஆகிடுமா
தித்திக்கும் பொருள்ஏதும் சாயீசன்-திருநாமம் ஒன்றினைப்-போல் உண்டோ
அன்னையின் அருட்பாலோ உயர்பசு வின்பாலோ
கல்லின் கனிஎன்னும் கற்கண்டு தீஞ்சுவையோ (2)
ஆச்சர்யம் ஆச்சர்யம் இந்த சுவை உண்டிலேனே (2)
காலமெல்லாம் உண்டு களித்திடுவே..னே.. (2)
தித்திக்கும் பொருள்ஏதும் சாயீசன்-திருநாமம் ஒன்றினைப்-போல் உண்டோ

நாமாவளி
சாயிராம் சாயிராம் ஸ்ரீசத்ய சாயி (2)
சாயிராம் சாயிராம் ஹே ப்ரேம சாயி (2)
சாயிராம் சாயிராம் த்வாரக மாயி (2)
சாயிராம் சாயிராம் ஹே-சாயி சாயி (2)

சாயிராம் சாயிராம் ராம க்ருஷ்ண சாயி (2)
ராமசாயி ராமராம் க்ருஷ்ண சாயி ஷ்யாம-ஷ்யாம் (2)

ஈஸ்வரி நந்தன சாயிராம ராமராம் (2)
    ஈஸ்வரீ நந்தன சாயிராம ராமராம்  

பர்த்தி புரீச ஷீரடி மஹேச சாயி பகவானுக்கி – ஜெய்

No comments:

Post a Comment