இனிய-சாயி நாமம்-கூறுங்கள்
அதைக் கூறுவதால் போகுது தொல்லை
கனிந்து-சாயி கீதம்-பாடுங்கள்
அதைப் போல-ஒரு ஆனந்தமில்லை
(2)
இனிய-சாயி நாமம்-கூறுங்கள்
அதைக் கூறுவதால் போகுது தொல்லை
அன்புத்-தந்தை என்ற-பேரைக் கொண்டானவன்
அன்பினுக்கோர் எல்லை-என்று நின்றானவன்
(2)
ஆத்ம-ரூபம் என்று-நமை அழைக்கின்றவன்
ப்ரேம-ரூபம் கொண்டு-அன்பைக் கொடுக்கின்றவன்
இனிய-சாயி நாமம்-கூறுங்கள்
அதைக் கூறுவதால் போகுது தொல்லை
ஆசை-கொண்டு பூசை-என்று பேரைச்-சொல்லுங்கள்
அன்பு-சேவை செய்து-உங்கள் விதியை-வெல்லுங்கள்
வேதமாக இதனைச்-சொன்ன அன்பு-ஆண்டவன்
சாயிராமன் என்ற-மனித வேஷம்-பூண்டவன்
அவன்-பெயரை ஒரு-தடவைக் கூறிப் பாருங்கள்
எமபயமே இல்லை-என்று ஆடிப்பாடுங்கள்
மானிடனாய் அவனை-எண்ணித் தள்ளாதீர்கள்
ஆண்டவனே அதனில்-ஐயம் கொள்ளாதீர்கள்
அவன் ஆண்டவனே அதனில்-ஐயம் கொள்ளாதீர்கள்
இனிய-சாயி நாமம்-கூறுங்கள்
அதைக் கூறுவதால் போகுது தொல்லை
கனிந்து-சாயி கீதம்-பாடுங்கள்
அதைப் போல-ஒரு ஆனந்தமில்லை
நாமம்-தனை நாவாலே உருகிச் சொல்லுங்கள்
சேவைதனைக் கையாலே புரிந்து நில்லுங்கள்
என்று-நமக்கு உய்யும்-பாதை வகுத்துத் தந்தவன்
யோகமென்று இதனை கீதை தன்னில் சொன்னவன்
அலையில்-யோகத் துயிலைக்-கொள்ளும் அந்த-நாரணன்
அலையும்-உலகைக் காக்க- அதனில் வந்த-பூரணன்
தலைவன்-என்று அமர்ந்து-வேலை வாங்கிடாதவன்
தானிரங்கித் தானிறங்கிச் சேவை செய்பவன் (2)
அந்த..
சாயி நாமம்- தன்னைக்கூறுங்கள்
அதைக் கூறுவதால் போகுது தொல்லை
(2)
இனிய-சாயி கீதம்-பாடுங்கள்
அதைப் போல-ஒரு ஆனந்தமில்லை
சாயி நாமம்- தன்னைக்கூறுங்கள்
அதைக் கூறுவதால் போகுது தொல்லை
நாமாவளி
சாயிராம சாயிராம சாயிராம சாயிராம
போலோ சாயிநாத் மகாராஜ்க்கி-ஜெய்
No comments:
Post a Comment