விருத்தம்
பித்தாக்கும் அன்பாலணைத்திடும் விதம்
தாயின் மேலாய் இதம்
தாராய் நீ ப்ரேமாவதார குருவாகி
ஹே சாயி நாராயணா
தந்தை நீ என்னிடர் போக்கிடும் நண்பனும் நீ
சீக்கிரம் வருவாய் அய்யா
என்னை வாட்டிடும் மாயம் போக்கிடும் விதம்
வாராயோ சாயீசனே
______________________
பஜரே குருசரணம் என்றிட வருவாய் மறுபடியும் (2)
ஹே-மானஸ பஜரே குரு-சரணம்
அடைந்தேன் சாயி உன்னடி சரணம் (2)
அழகாய் நடந்துநீ தரிசனம்-தரணும்
பஜரே குரு-சரணம் என்றிட வருவாய்-மறுபடியும்
ஹே-மானஸ பஜரே குரு-சரணம்
நீதான் சாயி ப்ரேமையின் ரூபம் (2)
கருணாம்..ருதம்-தரும் தெய்வமு..மாகும்
பஜரே குரு-சரணம் என்றிட வருவாய்-மறுபடியும்
ஹே-மானஸ பஜரே குரு-சரணம்
நீதான்-சாயி தாய்-தந்தை ரூபம் (2)
வேண்டிடா..மல்-அன்பு மழைதரும் மேகம்
பஜரே குரு-சரணம் என்றிட வருவாய்-மறுபடியும்
ஹே-மானஸ பஜரே குரு-சரணம்
நீதான்-சாயி சத்குரு ரூபம் (2)
அன்பெனும் வழிதரும் கலியுக தெய்வம்
பஜரே குரு-சரணம் என்றிட வருவாய்-மறுபடியும்
ஹே-மானஸ பஜரே குரு-சரணம்
குரு-சரணம்… பஜரே குரு-சரணம்
நாமாவளி
குரு-சரணம் பஜ-சரணம் சத்குரு-சரணம் பவ-ஹரணம்
சாக்ஷாத் பரமேச்வர ஸ்வரூப சாயி பகவானுக்கி –ஜெய்
No comments:
Post a Comment