Friday, May 1, 2020

393. நான் அழுது வேண்டுகின்றேன் (நான் ஒழிந்து நீயாக)



நான்-அழுது வேண்டுகின்றேன் வந்திடைய்யா (2)
நீ எங்கு ஐயனே என் சாயி நாதனே (2)
நான்-அழுது வேண்டுகின்றேன் வந்திடைய்யா
நானும்-நீயும் ஒன்று-தான் என்று-அன்று கூறினாய் (2)
தந்தையற்ற உன்னைப்-போல் என்னை-ஆக்கிக் காட்ட வா
நான்-அழுது வேண்டுகின்றேன் வந்திடைய்யா
அறிவோரும் பெரியோரும் த்யானத்தில் உனைக்காண்பர் (2)
அவர்-போலத் திறம்-எனக்கு அறவே இல்லை (2)
அவர்-போல மாறத்தான் தினமும்நான் முயல்கின்றேன் (2)
எப்பாடு பட்டும் என்னால் இயலவில்லை (2)
என்னுட..னா-போட்டி உனக்கது எதற்காக (2)
உதித்து-விடு ஐய்யா மானுடத்தில் (2)
மானிட வடி..வாய்த்தான் அறிய-மு..டியும்-உன்னை (2)
நான்-அறிய  முடியும்-உன்னை
நேரில்-வந்தே காட்டுன் பாதாரவிந்தமே (2)
நான்-அழுது வேண்டுகின்றேன் வந்திடைய்யா
நாமாவளி( G: குரு த்யாயி- நாமாவளி)
ஹே சாயி ஹே சாயி.. நீ வருவாய் த்வாரக-மாயி
ஏனோ ஏனிந்த-சோதனை உன்வரவே போக்கிடும் வேதனை
(ஹே சாயி ஹே சாயி)
குருதேவா வந்திடு-நல்ல பாதை-தந்தே தந்தெமைக் காக்க
(ஹே சாயி ஹே சாயி)

துயர் விலகிடவே மகிழ்வளித்திடவே
வருவாய் என் சாயி பிரான் துணையே

சகல லோக நாத சாயி பகவானுக்கி – ஜெய்



No comments:

Post a Comment