Friday, May 1, 2020

394. ஸ்வாமியிடம் பொய் ஏதுங்க(இறைவனிடம் கையேந்துங்கள்)


ஸ்வாமியிடம் பொய்ஏதுங்க சாயி முழுக்க-முழுக்க மெய்தானுங்க(2)
 பொறுமையிலே சிகரம்-தானுங்க சாயி-கோபப்பட்டு பார்த்ததாருங்க 
(2)
 ஸ்வாமியிடம் பொய்ஏதுங்க  சாயி முழுக்க-முழுக்க மெய்தானுங்க
சாமியின்னு சொர்க்கத்துல இருக்கலீங்களே
காலுமேல காலுபோட்டு குந்தலீங்களே 
இஷ்டப்பட்டு மனுஷனாக வந்தாருங்களே
கஷ்டப்பட்டு நமக்குச்சேவை செஞ்சாருங்களே
அவர் கஷ்டப்பட்டு நமக்குச்-சேவை செஞ்சாருங்களே
ஸ்வாமியிடம் பொய்ஏதுங்க  சாயி முழுக்க-முழுக்க மெய்தானுங்க
ஆசையோட ஏமி என்று கேப்பாருங்க 
காசுக்கில்ல பாசத்துக்கு அடிமை அவருங்க 
பெருமைக்கின்னு எதையும் அவர் செய்றதில்லங்க 
செய்ததெல்லாம்  சொல்லறதுன்னா நேரம் ஏதுங்க 

கல்லப்-பொண்ணா செஞ்ச-ராமனும்  இவரும்-ஒண்ணுங்க
பின்னால வந்த-கண்ணன் இவரு தானுங்க 
அவங்களப்போல் நாட்டுக்குள்ள இருந்திடாமங்க
ஜனங்களோட மனசுக்குள்ளே பூந்துட்டாருங்க
இவர்….பூந்து-அதத் தங்கமாக மாத்திட்டாருங்க 
ஸ்வாமியிடம் பொய்ஏதுங்க  சாயி முழுக்க-முழுக்க மெய்தானுங்க
தேடி-வந்து  தரிசனத்தத் தருவாருங்க
திருநீறைக் கரிசனமாய் கொடுப்பாருங்க 
தாகத்துக்குத் தண்ணி-குடுத்த மவராசனுங்க
நோவுநொடி போக்க-மருந்து தந்ததாருங்க    

சேவையின்னா இவர-மிஞ்ச யாருமில்லீங்க
அவருகிட்ட ஜாதிமத பேதமில்லீங்க
கொடுப்பதில கர்ணனுக்கும் கர்ணன் போலங்க
கேக்காமல நூறு-தரும் தயாளன்-தாங்க 
ஒண்ணும் கேக்காமல நூறு-தரும் தயாளன்-தாங்க
அந்த..
ஸ்வாமியிடம் பொய்ஏதுங்க சாயி முழுக்க-முழுக்க மெய்தானுங்க(2)
 பொறுமையிலே சிகரம்-தானுங்க சாயி-கோபப்பட்டு பார்த்ததாருங்க 
 ஸ்வாமியிடம் பொய்ஏதுங்க  சாயி முழுக்க-முழுக்க மெய்தானுங்க நாமாவளி
சாமி-எங்க சாமி-தங்க சாமி-எங்க சாயி-தாங்க (or) 
சாயிராம சாயிராம சாயிராம சாயிராம 

போலோ சாயிநாத் மகாராஜ்க்கி-ஜெய் 







No comments:

Post a Comment