Friday, May 1, 2020

399. எங்கள்-சாயி உலகில்(குழந்தையாக மீண்டும் கண்ணன்)

எங்கள்-சாயி மீண்டும்-உலகில் பிறக்கமாட்டானா
அவன் அன்பாய்-உலகில் நடந்து-காட்சி கொடுக்கமாட்டானா
(2)
ஆத்ம-ரூபம் என்று-நம்மை அழைக்க மாட்டானா (2)
நமை-ப்ரேம-ரூபம் என்று-கூறி அணைக்க மாட்டானா (2)
எங்கள்-சாயி மீண்டும்-உலகில் பிறக்கமாட்டானா
அவன் அன்பாய்-உலகில் நடந்து-காட்சி கொடுக்கமாட்டானா
வாடும்-ஜனங்கள் குறைகள்-கேட்டுத் தீர்க்க-மாட்டானா (2)
அவன் தானே-பஜனை பாடி-இன்பம் சேர்க்க-மாட்டானா 
வாடும்-ஜனங்கள் குறைகள்-கேட்டுத் தீர்க்க-மாட்டானா 
அவன் தானே-பஜனை பாடி-இன்பம் சேர்க்க-மாட்டானா 

மானச-பஜ என்று சாயி பாட மாட்டானா (2)
அவன் பாடும்போது நானும் கூடப் பாட மாட்டானா

தரிசனத்தில் பெரும்-ஜனத்தை மயக்க மாட்டானா 
தரிசனத்தில் பெரும்-ஜனத்தை மயக்க மாட்டானா 
அவன் திருநீறைச் சுரந்தவர்க்குக் கொடுக்க மாட்டானா (2)
துன்னபோத்து என்று-கேலி பேச மாட்டானா (2)
அவன் அன்புடனே இனிப்பெடுத்து வீச மாட்டானா
துன்னபோத்து என்று-கேலி பேச மாட்டானா
அவன் அன்புடனே இனிப்பெடுத்து வீச மாட்டானா
எங்கள்-சாயி மீண்டும்-உலகில் பிறக்கமாட்டானா
அவன் அன்பாய்-உலகில் நடந்து-காட்சி கொடுக்கமாட்டானா
தந்தைசாயி வந்து-வாழ்வில் வளம்-தருவானா  
எங்கள் தந்தைசாயி வந்து-வாழ்வில் வளம்-தருவானா  
ஒரு மானிடனாய் நம்மிடையே வலம்-வருவானா
ப்ரேமசாயி வடிவத்திலே அன்பினைத் தேனாய் (2)
அவன் வந்து-தர உண்டு-வாழ உயிர்த்திருப்பேனா
அவன் வந்து-தர என்று-உண்டு மகிழ்ந்திடுவேனோ (2)     
எங்கள்-சாயி மீண்டும்-உலகில் பிறக்கமாட்டானா

அவன் அன்பாய்-உலகில் நடந்து-காட்சி கொடுக்கமாட்டானா
(3)
கொடுக்கமாட்டானா
நாமாவளி
சாயிராம சாயிராம சாயிராம ராம்
சத்ய சாயிராம சாயிராம சாயிராம ராம்

No comments:

Post a Comment