குழைந்த-நெஞ்சில்
சாயி-நாமம் கொள்ள-வேண்டாமா
அன்பு-தந்தா..னே-நாம்
அதற்கு-நன்றி சொல்லவேண்டாமா
இழைந்து-மண்ணில்
அன்பு-சேவை செய்ய-வேண்டாமா
அவன் சொல்லை-மறக்க..வில்லை-என்று
காட்டவேண்டாமா
சாயி-கீதம் நாளும்-நாமும் பாடவேண்டாமா (2)
தினம் சாயி-நாமம் பாட-நாமும் கூடவேண்டாமா (2)
ஜெயஜெயஜெய ஜெயஜெயஜெய ஜெயஜெய-சாயிராம்
ஷிரடிசாயி சத்யசாயி ப்ரேம சாயிராம்
சாயி-தந்த பாதையிலே நடக்க-வேண்டாமா (2)
அவன்-திருநீறைத் தரும்படியாய் இருக்க-வேண்டாமா (2)
நொந்த-பேர்க்கு அன்பு-சேவை செய்ய-வேண்டாமா (2)
நாம்-பகைவருக்கும் அன்பு-தந்து அணைக்க-வேண்டாமா (2)
குழைந்த-நெஞ்சில் சாயி-நாமம் கொள்ள-வேண்டாமா
அன்பு-தந்தானே-நாம் அதற்கு-நன்றி சொல்லவேண்டாமா
வேறெவர்க்கும் கிடைத்திடாத பேறு-அல்லவா (2)
அதைப் பெற்ற-நமக்கு இருக்கும்பொறுப்பை எடுத்துச்-சொல்லவா
(2)
கையில்-சேவை நாவில்-பேரைக் கொள்ளவேண்டாமா
நம் வாழ்வில்-சாயி சொன்ன-சேதி ஒலிக்க வேண்டாமா
குழைந்த-நெஞ்சில் சாயி-நாமம் கொள்ள-வேண்டாமா
அன்பு-தந்தானே-நாம் அதற்கு-நன்றி சொல்லவேண்டாமா
சாயி சாயி சாயி என்று கூறவேண்டாமா
அதைக் கேட்கும்-காதில் தேனும்-அமுதும் ஊற-வேண்டாமா
குழைந்த-நெஞ்சில் சாயி-நாமம் சொல்ல-வேண்டாமா
அன்பு-தந்தானே-நாம் அதற்கு-நன்றி சொல்லவேண்டாமா
நாமாவளி
சாயிராம சாயிராம சாயிராம ராம்
சத்ய சாயிராம சாயிராம சாயிராம ராம்
No comments:
Post a Comment