மனிதனல்ல சாயிபிரான் ஆண்டவன் தானே (2)
அவன் அன்பாய்-உலகில்மானிடனாய் அவதரித்தானே (2)
↑யுகம்-யுகமாய் நான்-வருவேன் என்பது-தானே (2)
அந்த கீதை-சொன்ன திரு-உருவம் இவனது-தானே (2)
(மனிதனல்ல சாயிபிரான்..)
↓கருடன்-மீது பறக்கும்-அந்த நாரணன்-இவனே (2)
விடை ஏறும்-அந்த பரம-சிவன் ரூபமும்-இவனே (2)
↑சலமகளோ டெருக்கணிந்த சிவ-பெருமானே (2)
அவன் அலைமகளோ…டருள்-புரிந்த நாரணன்-தானே (2)
(மனிதனல்ல சாயிபிரான்..)
↓*சாடு-சாடு பாதனென்று மழிசை-பிரானே (2)
திவ்யப் பாட்டுப்-பாடிப் பணிந்ததுவும் சாயிபிரானே (2)
↑*வெற்பெடுத்து வேலை-நீர்-க..லக்கிச் சென்றானே (2)
இன்று அற்புதங்க..ளாய்ப்-புரிந்த சாயிபிரானே (2)
(மனிதனல்ல சாயிபிரான்..)
↓*முத்தைத்தரு பத்தித்-திரு நகை-முருகோனே (2)
எங்கள் சித்திலிரு சத்தைத்தரு சாயிபிரானே (2)
↑சுத்த சத்வ-சித்தினுரு என்பது-தானே (2)
சத்ய தர்ம-சாந்தி ப்ரேமத்திரு சாயி-பிரானே (2)
(மனிதனல்ல சாயிபிரான்..)
↓*நேற்று-இன்று நாளை-என்று பூமியில்-தானே (2)
வந்து அவதரித்..தருள்-பெருமான் சாயிபிரானே (2)
↑சாயி-சாயி என்று-போற்றிப் பாடிடுவோமே (2)
இந்த மாய-வாழ்வில் வெற்றி-வாகை சூடிடுவோமே
நாமாவளி
ஷிரடி-சாயி சத்ய-சாயி ப்ரேம சாயிராம்
சகல தேவ-ரூப சகல-லோக நாத-சாயிராம்
நாலாயிர திவ்யப்ரபந்தம்(திருமழிசை ஆழ்வார்)
837- “சாடு சாடு பாதனே சலங்கலந்த பொய்கை வாய்”
790-“வெற்பெடுத்து வேலை நீர் கலக்கினாய் அதன்றியும்”
No comments:
Post a Comment