Sunday, May 3, 2020

444. உலகை நாடு (குழந்தையாக மீண்டும் கண்ணன்)



உலகை நாடு  உலகை நாடு சாயி பிரானே
நீ இல்லாவிட்டால் நாங்கள்-வாழும்  வாழ்க்கையும் வீணே   
நாங்கள்-பாடும் பஜனை-கேளு சாயி பிரானே
அதில் இறங்கி-இந்த உலகை-நாடு சாயிபிரானே
(உலகை நாடு உலகை நாடு )
பஜனை-பாடு பஜனை-பாடு சாயிபிரானே
அதைக் கேட்டு-ரொம்ப காலமாச்சு சாயிபிரானே

 நடையைப்-போடு நடையைப்-போடு சாயி-பிரானே (2)
அதைப் பாக்காமலே பூத்து-போச்சுக் கண்களும்-தானே
(உலகை நாடு உலகை நாடு )
சிரித்துப்-பேசு சிரிக்கப்-பேசு சாயி பிரானே
அதைப் கேக்காமலென் சிரிப்பு-போச்சு சாயிபிரானே
இனிப்பு-வீசு எடுத்து-வீசு சாயி பிரானே (2)
அது இல்லா-வாழ்வு கசக்குதையா சாயிபிரானே
(அலையும் நெஞ்சே..)
சுத்திய-விரல் கோலம்-போடு சாயி-பிரானே
அதில் உலகம்-கொண்ட சோகம்-போக்கு சாயி பிரானே
நெத்தியில்-விரல் இட்டு-உந்தன் சிந்தனையாலே
எங்கள் வல்வினைகள் போக்க-வந்திடு சாயி-பிரானே

நாமாவளி
சாயிராம சாயிராம சாயிராம ராம்
தீனபந்து கருணாசிந்து சாயிராம ராம்
ஹே தீனபந்து கருணாசிந்து சாயிராம ராம்
 சாயிராமசாயிராமசாயிராம ராம் ஷிரடி-சாயிராமசாயிராமசாயிராம ராம்
சாயிராமசாயிராமசாயிராம ராம் சத்ய-சாயிராமசாயிராமசாயிராம ராம்
சாயிராமசாயிராமசாயிராம ராம் ப்ரேம-சாயிராமசாயிராமசாயிராம ராம்



No comments:

Post a Comment