Sunday, May 3, 2020

445. சாயி-உன் நாமமே (மாதவ மாமவ தேவா கிருஷ்ணா)



பல்லவி
சாயி-உன் நாமமே தேவாம்ருதமா
ஒரு-முறை சொன்னால் பவபயம் வருமா

அனுபல்லவி
ப்ரேமஸ்வரூபலாரா ஆத்மஸ்வரூபலாரா
என்பதுன் குரலா அதுதான் அமுதா

சரணம்-1
புன்-சிரிப்பே நிலா தென்றலே உன் உலா
உன் வார்த்தையே பலா உன்-பார்வை சீதளா
எங்குமிலாதாக என்றுமிலாதாக
தோன்றிய உன்ரூபம் நான்-கூறல் ஆகுமா
(சாயி-உன் நாமமே..)
சரணம்-2
நடவரக் கண்ணனா நீ-நட ராஜனா
கோசலை ராமனும் நீதானோ சாயிராம்
அண்டம் படைத்தாளும் தெய்வமே ஆனாலும்
என்-பிழை பொறுத்தருளும் உன்-போல ஆகுமா
(சாயி-உன் நாமமே..)





No comments:

Post a Comment