Monday, May 4, 2020

502. சொல்லிட ஒரு நாமம் (கோதையின் திருப்பாவை)


சாய்ராம்.. சாய்ராம்.. சாய்ராம்.. சாய்ராம்.. +(SM)
சொல்லிட ஒரு நாமம் நற்கதி தரும்-நாமம்
ஓம்-எனும் திருநாதம் ஓம்-சாயி..ராம் (2)
மாதவம் புரியாமல் எளிதினில் மெய்ஞானம்
தந்திடும் குருவாகும் ஓம்-சாயிராம் (2)
சொல்லிட ஒரு நாமம் நற்கதி தரும்-நாமம்
ஓம்-எனும் திருநாதம் ஓம்-சாயி..ராம்
(MUSIC)
காரணம் தெரியாமல் தினம்-தினம் பல-கார்யம்
செய்கிறோம் அதனாலே பலனும் உண்டா (2)
     மார்கழித் திருநாளில் நித்தமும் அதிகாலை (2)
சொல்லிட வேண்டும்-நாம் ஓம்-சா..யி..ராம் (2)
(MUSIC)
சாயிராம் எனும் நாமம் நம்வினை பவம் போக்கும்
கஷ்டமா நாம் சொல்ல ஓம்-சாயிராம் (2)
அந்திமம் எனும்-நாளில் கிங்கரர் வரும்-வேளை (2)
காத்திடும் ஓர்-நாமம் ஓம் சாயிராம் (2) 
(MUSIC)
பாண்டவப் பாஞ்சாலி மானத்தி..னைக்-காக்க
சொன்னது ஓம்-சாயி ஓம்-கோவிந்தா (2)
யானை கஜேந்த்ரனும் உயிரினைக் காத்திடக்
கூப்பிட்ட ஒருநாமம் ஓம்-சாயிராம் (2)
(MUSIC)

பாழுடல் சாகுமுன்னே வீழ்ந்தது போகுமுன்னே
சொல்லிடுவோம்-சாயி நாமம்-நன்றாய் (2)
ஊழ்வினை-போக்கிடும்  நலம்-கொண்டு சேர்த்திடும் (2)
சொல்லிடுவோம் நாமும் ஓம்-சாயிராம் (2)
சொல்லிட ஒரு-நாமம் நற்கதி தரும்-நாமம்
ஓம்-எனும் திருநாதம் ஓம்-சாயி..ராம் (2)
மாதவம் புரியாமல் எளிதினில் மெய்ஞானம்
தந்திடும் குருவாகும் ஓம்-சாயிராம் (2)





No comments:

Post a Comment