தாயன்பில் அமுதாக்கும் மகளிர் இதோ
அதை அருளாக்கும் ஸ்ரீ சாயி ராமன் இதோ
(2)
நோய் போக்கிடும் சாயி அமுதம் இதோ
அதைப் பரிமாறிடும் சாயித் தொண்டர் இதோ
(2)
தாயன்பில் அமுதாக்கும் மகளிர் இதோ
அதை அருளாக்கும் ஸ்ரீ சாயி ராமன் இதோ
(Music)
சொல்லால் வழி கொடுத்த சாயி இதோ
அதைச் செயலாக்கும் நல் சாயித் தொண்டர் இதோ
(2)
எங்கே என நோயும் போச்சே இதோ
எங்கள் ஸ்ரீ சாயி ராமன் அருள் தானே அதும்
எங்கள் ஸ்ரீ சாயி ராமன் அருள் தானே எதும்
நோய் போக்கிடும் சாயி அமுதம் இதோ
அதைப் பரிமாறிடும் சாயித் தொண்டர் இதோ
(Music)
உணவே நல் மருந்தாகும் மாயம் இதோ
அதை உண்டோரின் உடல் கொண்ட நோயும் எதோ
(2)
துயர் போக்கிடு என்ற நாதன் இதோ
அதைச் சிரம் மேல் கொண்டே உழைத்தத் தொண்டர் இதோ (2)
நோய் போக்கிடும் சாயி அமுதம் இதோ
அதைப் பரிமாறிடும் சாயித் தொண்டர் இதோ
(Music)
நோய் போக்க ஸ்ரீ சாயித் தந்தை நினைத்தார்
நல்ல ஔஷதம் போல் அமுத அன்னம் அளித்தார்
(2)
சாயித் தொண்டில் ஈடுபடும் வாய்ப்பைக் கொடுத்தார்
நாம் சேர்த்து வைத்த கருமம் விழப் பாதை வகுத்தார் (2)
தாயன்பில் அமுதாக்கும் மகளிர் இதோ
அதை அருளாக்கும் ஸ்ரீ சாயி நாதன் இதோ
நோய் போக்கிடும் சாயி அமுதம் இதோ
அதைப் பரிமாறிடும் சாயித் தொண்டர் இதோ
தாயன்பில் அமுதாக்கும் மகளிர் இதோ
அதை அருளாக்கும் ஸ்ரீ சாயி ராமன் இதோ
No comments:
Post a Comment