Wednesday, February 1, 2023

635.சாயி ராமன் சந்நிதி சேர்ந்தே(ஸ்ரீ கணேசா சிவுனி குமாரா **

சாயி ராமன் சந்நிதி சேர்ந்தே  நம்மனம் களித்திடுவோம் சதா  நம்மனம் களித்திடுவோம் (2)
பூமியின் மேலே ஸ்வர்க்கமிதானா (3)
என்று நாம்-எண்ணிடிட தோன்றுமே சதா ஆஹா அடடா நனவா கனவா (No chorus)
சாயி ராமன் சந்நிதி சேர்ந்தே  நம்மனம் களித்திடுவோம் சதா  நம்மனம் களித்திடுவோம்
கண்டிடக்  கண்டிட ஆனந்தக் கண்ணீர்
சந்நிதி கண்டிட ஆனந்தக் கண்ணீர்
கண்டிட எண்ணிட  ஆனந்தக் கண்ணீர்
பக்தரின் கண்களில் பெருகக் காணலாம்  இந்தப் பிறவியின் பலனைக் காணலாம் (No chorus)
சாயி ராமன் சந்நிதி சேர்ந்தே  நம்மனம் களித்திடுவோம் சதா  நம்மனம் களித்திடுவோம்
எத்தனை நேரம் அங்கு  நாமிருந்தோம் (3)
என்ற கணக்கெல்லாம் மறந்திடும் அடடா அத்தனை பாபமும் கழிந்து போகுமாம் (NOC)
சாயி ராமன் சந்நிதி சேர்ந்தே  நம்மனம் களித்திடுவோம் சதா  நம்மனம் களித்திடுவோம்
நன் மன சாதுக்கள் சேவிக்க வருவார்
நம்மிடை சாதுக்கள் சேவிக்க வருவார்
நம்மினும் சாதுக்கள் சேவிக்க வருவார்
என்னபேறு கொண்டோம்-என நாம்நினைப்போம் என்று சதா-அந்த நினைப்பினில் களிப்போம் (No chorus)
சாயி ராமன் சந்நிதி சேர்ந்தே  நம்மனம் களித்திடுவோம் சதா  நம்மனம் களித்திடுவோம்
ஸ்ரீ கைலாச-வை..குண்..டமிதானா (3)
என்று நமை..எண்ண வைத்திடுமே-ஆஹா 
பர்த்தி புரீசன்-ப்ரசாந்தி நிவாஸம் (No chorus)
சாயி ராமன் சந்நிதி சேர்ந்தே  நம்மனம் களித்திடுவோம் சதா  நம்மனம் களித்திடுவோம்
ஸ்ரீ சாயீசன்-ப்ர..சாந்தி நிவாஸமே (3)
சாயி பஜனைகள் ஒலித்திடத் திகழுமே
அதைவிட மேலாய் எது உண்டு கூறாய் 
சந்நிதி வா வா ( NO Chorus)
சாயி ராமன் சந்நிதி சேர்ந்தே  நம்மனம் களித்திடுவோம் சதா  நம்மனம் களித்திடுவோம்
சாயி ராமன் சந்நிதி சேர்ந்தே  நம்மனம் களித்திடுவோம் சதா  நம்மனம் களித்திடுவோம் (2)
Fast 

முதல் பக்கம்

No comments:

Post a Comment