Thursday, February 2, 2023

636.பர்த்தியே பூவுலகில்(சித்திரைத் தேரோடும்) **

பர்த்தியே பூவுலகில் சொர்க்க புரீ-அங்கு சென்றதும் நாள் கணக்கு... மறக்குதம்மா (2)
சத்திய சாயிபிரான் அருள்புரியும் ஷேத்திரமாம் (2)
பக்தியில் அதை அடைந்தால் மனச் சாந்தி கிடைக்குமம்மா (2)
பர்த்தியே பர்த்தியே பூவுலகில் சொர்க்க-புரீ சாந்தி-புரீ
(MUSIC)

எத்திசையும் அதனின் புகழ் பரவுதம்மா (2)
அங்கே நித்தமும் தேடிபெரும் பக்தர் கூட்டம்  வருமம்மா
சொல்லாலும் எழுத்தாலும் விளங்காத நிம்மதியும் (2)
தந்தாளும் சாயிபிரான் குடியிருக்கும் சந்நிதியாம் (2)  
பர்த்தியே பர்த்தியே பூவுலகில் சொர்க்க-புரீ சாந்தி-புரீ
(MUSIC)

சந்நிதி-எதிரிலே நம்மிரு-கண்சுரந்து சத்திய சாயிநீ.. எங்கே.. என-ஒலிக்கும் (2)
சித்தத்தின் எதிரொலியில் நாமெல்லாம் மெய்மறக்கும்
அந்தநாள் என்றென்றும் வாழ்நாளில் நினைவிருக்கும் (2)
பர்த்தியே பர்த்தியே பூவுலகில் சொர்க்க புரீ-அங்கு 
சென்றதும் நாள் கணக்கு... மறக்குதம்மா...
பர்த்தியே பர்த்தியே பூவுலகில் சொர்க்க-புரீ சாந்தி-புரீ



 

No comments:

Post a Comment