Thursday, November 6, 2025

644.அன்புடன் இரு (நுவு நடவக)-Sathya SAI centenary Song

 

அன்புடன்-இரு என-உன் மொழி சாயி தேவா
நீ தந்த சேவை வாழ்க்கை வழி தேவதேவா...
(3)
(MUSIC)
பாசம் பொங்கும் உனது விழி அதனில் தோன்றும் போத மொழி 
சத்ய தர்ம சாந்தி ப்ரேமை மிளிரும் சேவை எங்கள் வழி
(2)
உந்தன் வாழ்க்கை உந்தன் செய்தி என்ற நிலையைத் தாண்டிச் சென்று
(2)
எங்கள் வாழ்க்கை உனது செய்தி என்ற நிலையை அருளு அய்யா 
சாயி ராம்..சாயி ராம்..சாயி ராம் சத்ய சாயி ராம் (2)
(MUSIC)
உதவிசெய்து ஆறுதல் அளி தோன்றும் நெஞ்சில் மாறுதல் ஒளி
என்று பாதை தந்த சாயி உந்தன் போதம் காட்டும் வழி
(2)
தந்தை தாய்க்கு சேவை செய்ய கிட்டும் வாழ்வில் உய்யும் வழி..
(2)
என்றுயர்ந்த தத்துவங்கள் சுலபமாகப் புரியச் சொன்னாய்
சாயி ராம்..சாயி ராம்.. சாயிராம்..சத்ய சாயி ராம் (2)
(MUSIC)
 உயர்ந்த-கல்வி வைத்யமும்-அளித்து  வேத-சாஸ்த்ர சாரமும்-அளித்து (2)
உன் உடலே கோவில் என ஆன்மமே தெய்..வம் என 
உறங்கும்-மாந்தர் விழிக்க-ஞான போதம்-தந்து அவரைத்-தட்டி எழுப்பினாயே 
உன்னையன்றி யார் புரிவார் பாரில் வேறு யார் ஸ்வாமி  
சாயி ராம்..சாயி ராம்..சாயி ராம் சத்ய சாயி ராம் (2)

அன்புடன்-இரு என-உன் மொழி சாயி தேவா
நீ தந்த சேவை வாழ்க்கை வழி தேவதேவா..

அன்புடன்-இரு என-உன் மொழி சாயி தேவா
நீ தந்த சேவை வாழ்க்கை வழி தேவதேவா...சாயி தேவா ..





முதல் பக்கம்



No comments:

Post a Comment