
ஏதய்யா வேறேதய்யா
ஏதய்யா வேறேதையா நான் உய்வழி அடைய உன்-மடி மேல்-கதி (3)
ஏதய்யா வேறேதய்யா ..
பாபா.. பாபா
ஞானம் என்பது தேடற்கரிது (2)
ஞானிகளும்-பார் உரைத்துச் சென்றார் (2)
ஞானம் என்பது தேடற்கரிது ஞானிகளும்-பார் உரைத்துச் சென்றார்
ஞானமெல்லாம் நான் அடைவதெங்கே (2)
உன்னையன்றி… கதியறியேன்
ஞானமெல்லாம் நான் அடைவதெங்கே
உன்னையன்றி… கதியறியேன் (2)
ஏதய்யா வேறேதையா நான் உய்வழி அடைய உன்-மடி மேல்-கதி ஏதய்யா வேறேதய்யா..
பாபா.. பாபா
குறைந்த என்-மதி நீ பொறுப்பாய்
குறைந்த என்-மதி நீ பொறுப்பாய்
மறுக்காமல் நீ கதி கொடுப்பாய்
(2)
உனது-அன்புக்கு ஓர் இணையில்லை (2)
அதை அளிக்க மீண்டும் வா சாயீசா
உனது-அன்புக்கு ஓர் இணையில்லை
அதை அளிக்க மீண்டும்-வா சாயீசா (2)
ஏதய்யா வேறேதையா நான் உய்வழி அடைய உன்-மடி மேல்-கதி ஏதய்யா வேறேதய்யா ..
பாபா.. பாபா
வறுக்குதய்யா என்-வினை ஆயிரம் பொறுக்குதில்லை நீ அறிந்திலையோ
(2)
மறைகள் உரைக்கும் பெரு நிலைதனை அடைந்தே (2)
உய்வெங்கே அது எனக்கெங்கே
அலைகள் ஓய்ந்து நான் குளிப்பது எங்கே
அது-எங்கே சொல் எனக்கெங்கே
சொல் அய்யே நீ சொல் மெய்யே
ஏதய்யா வேறேதையா நான் உய்வழி அடைய உன்-மடி மேல்-கதி ஏதய்யா வேறேதய்யா ..
பாபா.. பாபா
பாபா பாபா என்றுரைத்தலின் அறியா என்-மதி ஏதறியும் (2)
வாராயோ எனைப் பாராயோ-நீ வாராயோ எனைப் பாராயோ
பாபா வாவா நான்-உன் குழந்தை
பாபா வாவா காட்டுன் மடியே
ஏதய்யா வேறேதையா நான் உய்வழி அடைய உன்-மடி மேல்-கதி ஏதய்யா வேறேதய்யா ..
பாபா.. பாபா
பாபா
No comments:
Post a Comment