Tuesday, January 28, 2020

601. அந்த நாள் வருமா (கண்ட நாள் முதலாய்) **



அந்த-நாள் வருமா என்று தவிக்குதடி 

அந்த-நாள் வருமா என்று தவிக்குதடி 
ஸ்வாமியின் தரிசனத்தைக் காணத் துடித்து நெஞ்சம்
(2)
அந்த-நாள் வருமா என்று தவிக்குதடி
(MUSIC)
இன்னிசை பாட எழில் குல்வந்த் சபாவில் (2) 

இன்னிசை பாட சாயி குல்வந்த் சபாவில்
வந்து இதம் தந்த ஸ்வாமி முகம் பார்த்திட
(2)
அந்த-நாள் வருமா என்று தவிக்குதடி 
(MUSIC)
ஸ்வாமியின் புன்சிரிப்பை நெஞ்சமும் மறக்கவில்லை

ஸ்வாமியின் புன்சிரிப்பை நெஞ்சமும் மறக்கவில்லை
கையுதிர் நீறுதன்னின் வாசமும் மறையவில்லை 
(2)
கண்ணைச் சிமிட்டும் ஓர்-கணத்தினில் மறைந்து விட்டான் (2)

கண்ணைச் சிமிட்டும் ஓர்-கணத்தினில் மறைந்து விட்டான்
பிரிவெனும் தீ-மூட்டி அகத்-தணல் ஊதிவிட்டான்
(2)
அந்த-நாள் வருமா என்று தவிக்குதடி 
ஸ்வாமியின் தரிசனத்தைக் காணத் துடித்து நெஞ்சம்
அந்த-நாள் வருமா என்று தவிக்குதடி 




No comments:

Post a Comment