Friday, January 31, 2020

602. நாம் ஆராதனை செய்வோம்(ஓம் ஜெய் ஜெகதீச ஹரே) **



நாம் ஆ..ரா..தனை செய்வோம்
நல் ஆ..ரா..தனை செய்வோம்
பவம்-விழ அன்பெனும் சேவையில்
நிஜம்-எழ வழி-தரும் ஸ்வாமியை
மனம்-இர வேண்டியே-நாம்
நல் ஆ..ரா..தனை செய்வோம்

மேலாம் சேவையைச் செய்திடு
என அருள் மொழி-உரைத்தார்
ஸ்வாமி மறை-மொழி எனக் கொடுத்தார்
மனம்-தனில் நாமத்தைக் கூறி
கரம்-தனின் சேவையில் ஊறி
கசிந்திதயம் பாகாய்
நல் ஆ..ரா..தனை செய்வோம்

மாத-பிதாவுக்கும்-மேலே அருள்-தர அவதரித்தார்
அருள் தரப்-புவி அவதரித்தார்
அவர்-பதம் புகல்-என நாடி
அவர்-புகழ் மாலையைச் சூட்டி
ஆண்டவனாம் அவர்க்கு
நல் ஆ..ரா..தனை செய்வோம்

இமயமுறை அமர் நாதர் அவர் மா..தொருபாகர்
அருள் தரும்-மா..தொருபாகர்
அவர்-சிவ..சக்தி-ஸ்வ..ரூபர்
அருள்-விரு..பாக்ஷரின்-ரூபர்
என-அவ..ரை உணர்ந்தே 
நல் ஆ..ரா..தனை செய்வோம்

வினைப்பயன் போய்விட-வேண்டிடு அதைத்தரத் தானிருக்கார்
ஸ்வாமி அதைத்தரத் தானிருக்கார்
காப்பாய் நீ-எனக்கூறி
ஹே-சா.. யீ-எனக் கூவி
விடாமலே கரைந்தே
நல் ஆ..ரா..தனை செய்வோம்

ஒவ்வொரு உயிரிலும்-ஆத்மா அவர்-அந்தர்யாமி
ஸ்வாமி அவர்-அந்தர்யாமி
ப்ரேம சாயி-என வந்திட
ஆத்ம சாயி நம்மில் தென்பட
சாந்தியின்-உருவாகி
நல் ஆ..ரா..தனை செய்வோம்

அன்பாய் வாய்-மொழி பேசுவோம் அது-தான் சாயி-வழி 
நமக்கது தான் தாயின்-மொழி
பிறர்-புண்படாமல் பேசிடு
பலன்-கரு..திடாமல் உதவிடு
எனுமவர் கூற்றின் படி 
நல் ஆ..ரா..தனை செய்வோம்

தீனபந்து என்றும்-நீதான் ஆதரவும்-நீதான்
ஸ்வாமி ஆதரவும்-நீதான்
எனவே பாடிப்-பணிந்து
எனவே கண்கள்-கசிந்து
மோகமிலா-நெஞ்சில்
நல் ஆ..ரா..தனை செய்வோம் 

அனைவரும் ஒன்றில்-ஒன்..றாவோம்
ப்ரார்த்தனை-செய்வோம் நாம்
ஒன்றி ப்ரார்த்தனை செய்வோம் நாம்
பண்பால் பக்தர்கள் ஆனோம்
அன்பால் ஓர்மனம் ஆனோம்
சாயிபிரான் அருளால்
நல் ஆ..ரா..தனை செய்வோம்

நாம் ஆ..ரா..தனை செய்வோம்
நல் ஆ..ரா..தனை செய்வோம்
பவம்-விழ அன்பெனும் சேவையில்
நிஜம்-எழ வழி தரும் ஸ்வாமியை
மனம்-இர வேண்டியே-நாம்
நல் ஆ..ரா..தனை செய்வோம் (2)
நாம் ஆ..ரா..தனை செய்வோம் 



No comments:

Post a Comment