Saturday, February 8, 2020

603. உன்னையே கதியென்று (நின்னையே ரதியென்று) **


உன்னையே கதியென்று எண்ணினேனம்மா சாயிமா

உன்னையே கதியென்று எண்ணினேனம்மா சாயிமா
உன்னைப்-போல் எவருண்டு என்று-ஏங்கினேன்..
கணமும் ஏங்கினேன்
(2)
(MUSIC)
உன்னையே நினைத்து-மேனி
சன்னமாய் இளைத்து நானும்
(2)
மண்ணிலே நொந்து வாழ்கிறேன்  சாயிமா
உன்னையே நினைத்து-மேனி
சன்னமாய் இளைத்து நானும்
மண்ணிலே நொந்து வாழ்கிறேன்  சாயிமா
மண்ணிலே நொந்து வாழ்கிறேன் 
சாயிமா ..
உன்னையே கதியென்று எண்ணினேனம்மா சாயிமா
உன்னைப்-போல் எவருண்டு என்று-ஏங்கினேன்..
கணமும் ஏங்கினேன்
 (MUSIC)
யோகம் கொண்டுனை நல்-த்யானம்
தன்னில் உன்னைக்-காண-நான் கற்றறியேனே
 என்று காண்..பேனோ
(2)
சாயிமா .. சாயிமா …
உன்னையே கதியென்று எண்ணினேனம்மா சாயிமா
உன்னைப்-போல் எவருண்டு என்று-ஏங்கினேன்..
கணமும் ஏங்கினேன்.. கணமும் ஏங்கினேன்..
 (MUSIC)
 காதிலே பொழிந்தினிக்கப் பாசமாய் அமுதும்-தோற்கும் (2)
பங்காரு என்ற சொல்லையே சொல்..லம்மா
காதிலே பொழிந்தினிக்க பாசமாய் அமுதும் தோற்கும் பங்காரு என்ற சொல்லையே சொல்..லம்மா
மண்ணிலே வந்து நேரிலே சொல்லம்..மா ..
உன்னையே கதியென்று எண்ணினேனம்மா சாயிமா
உன்னைப்-போல் எவருண்டு என்று-ஏங்கினேன்..
கணமும் ஏங்கினேன்..
கணமும் ஏங்கினேன்..



No comments:

Post a Comment