விழிக்குத் துணை சாயிமென்மலர்ப் பாதங்கள் (2)
மெய்ம்மை என்றால லதற்கு இணை சாயீ..உன் பாதங்கள்
அன்புபெய்த மழைக்குமிணை என வந்ததுநாளும்
இனித்த சுளை மொழிக்கு இணை தரும்தாளைக் காணோமே
-------------------------
நன்றுநன்றுநன்று சென்றுவிட்டாய்இன்று என்னஉந்தன் ந்யாயமே
பாபா.. எங்குமுறை யிடுவேனே
(2)
சின்னக் குடைபோலே உந்தன் முடியாலே (3)
மனதைப் பறித்தாயே ஞாலம் வா தாயே (2)
நன்றுநன்றுநன்று சென்றுவிட்டாய்இன்று என்னஉந்தன் ந்யாயமே
பாபா.. எங்குமுறை யிடுவேனே
தெக்கணம் பெற்ற பர்த்தியின் ஜோதியே (3)
எக்கணமும் நான் உன்னைப் பாட்டிலே (2)
உணரப் பொருள்காண அருள்புரி-சாயிராம் (2)
கருணையுடன் மண்ணில் வந்தருள் வாயே (2)
நன்றுநன்றுநன்று சென்றுவிட்டாய்இன்று என்னஉந்தன் ந்யாயமே
பாபா.. எங்குமுறை யிடுவேனே
No comments:
Post a Comment