Tuesday, February 11, 2020

400. அருவாய்-இருந்து (விறல் மாறன் ஐந்து-திருப்புகழ்)



அருவாய்-இருந்து உருவாய்ப்-பிறந்து குருவாய்-இருந்த பெருமானே
கனிவாகுமன்பு உன்ரூபம்-என்று திருவாய்மலர்ந்த நீ-தானே
அழகாய்-நடந்து திருக்காட்சி-தந்து  மனம்-வாடும்-மாந்தர் குறை-தீர    
பெரும்-ஆறு-என்று திருநீறு-தந்து துணையான-சாயி பகவானே
உன்சரணம்-கொள்ள உன்-நாமம்-சொல்ல வினையாவும்-மெல்ல  விலகாதோ
கனிவான-சொல்லை பணிவான-சேவை கொண்டோர்க்கு-வாழ்வு புலராதோ  
எனவே-புகன்று உளமே-புகுந்து பெருமாற்றம் செய்த-சாயீசா
உணவே-எனக்கு உன்பேர்-இருக்கு அதுபோல்-இனிப்பு வேறேதோ 
அதுபோல்-இனிப்பு ஏதேதோ
சாயி திருநாமம் போல வேறேதோ

ஸ்ரீ-சாயிராம ஹே-சாயிராம ஜெய்-சாயிராம ராம்ராம்ராம்
ஸ்ரீ-சாயிராம ஹே-சாயிராம ஜெய்-சாயிராம சாயி..ராம்


No comments:

Post a Comment