Tuesday, March 10, 2020

474. சாயி என்ற கணத்திலே (பழனி என்ற ஊரிலே) **


சாயி-என்..ற கணத்திலே ஸ்வாமி-நின்..ற மனத்திலே
பறந்ததம்மா ஊழ்வினை மறைந்ததம்மா பாழ்வினை
தானாய் மறைந்ததம்மா பாழ்வினை
(MUSIC)
 இருள்-விரட்டும் நிலவெனவே அவன்-திருமுகம்-கண்டுவிட
கதிரவனைக் கண்ட-பனி என்றே பவபயம் ஓடிவிட
ஸ்வாமியவன் பேரினிலே சக்கரை போல்-சுவை இனிப்பு-வர (2)
உன்-சோகம் போகுமய்யா பொன்பொருள்-மாயமும் ஏதுக்கய்யா 
உன்-சோகம் போகுமய்யா பொன்பொருள்-மாயமும் ஏதுக்கய்யா 

அடடா..சாயி-என்..ற கணத்திலே ஸ்வாமி-நின்..ற மனதிலே
(MUSIC)
அலை-அலையாய் புரண்டோடும் காவி-உடை ஆடிவர 
வந்த-பெரும் ஜனக்கூட்டம் இனிய பஜனை பாடி-வர
ஒயிலா..க மயில்போலே சாயி-தரிசன நடை-நடக்க (2)
ஆயிரம்-ஆயிரம் கண்வேண்டும் அத்திருக்காட்சியைக் கண்டுதொழ
அடடா..சாயி-என்..ற கணத்திலே ஸ்வாமி-நின்..ற மனதிலே
பறந்ததம்மா ஊழ்வினை மறைந்ததம்மா பாழ்வினை
தானாய் மறைந்ததம்மா பாழ்வினை






No comments:

Post a Comment