Saturday, March 14, 2020

611.சாயியின்-நாமம் தேனே (வைஷ்ணவ ஜனதோ) **

சாயியின்-நாமம் தேனே-அதைவிட மேலெதும்-இனிதோ சொல் தோழி
(2)
அதனுடனே பிறர் துயர்-அறச்சேவையைப் புரிவது-யோகம்-தான் புரிவாயே
சாயியின்-நாமம் தேனே-அதைவிட மேலெதும்-இனிதோ சொல் தோழி
(MUSIC)
 சகல-வேதமாம் இதுவே-என்றே சொன்னால் அது-பொய் ஆகாதே 
வாய்மை வாய்மை-எனச் சொன்னதிதானே 
மெய்யினில் மெய்ச்சொல் கேள்-தோழி
சாயியின்-நாமம் தேனே-அதைவிட மேலெதும்-இனிதோ சொல் தோழி
(MUSIC)
நில்லாப்-பாரில் எல்லாம்-மாயை என்றால்-ஒன்றும் புரியாதே
எனவே இதை நாம்-உணர்வது போலே 
சொல்லித்-தான் செய்தார் நம்-ஸ்வாமி
சாயியின்-நாமம் தேனே-அதைவிட மேலெதும்-இனிதோ சொல் தோழி
(MUSIC)
அறிவாய்-நீ நான் யார்-எனவென்றே புரியும்-சேவையினால் என்றாரே
ப்ரேம-ரூபம்-நீ ஆத்மமும்-நீயே நன்கிதை-உணர்வாய் என்றாரே
சாயியின்-நாமம் தேனே-அதைவிட மேலெதும்-இனிதோ சொல் தோழி
(MUSIC)
அனைத்தும்-நானே அனைத்திலும்-நானே கீதை-சொன்ன மொழி-நன்றாமே
அதை-மனம்-கொள்ளும்-விதம் வாய்மையின்-மொழியாய் -
வழியாய்க்-கொடுத்தார் அன்பாலே
 சாயியின்-நாமம் தேனே-அதைவிட மேலெதும்-இனிதோ சொல்-தோழி
அதனுடனே பிறர் துயர்-அறச்சேவையைப் புரிவது-யோகம்-தான் புரிவாயே
சாயியின்-நாமம் தேனே-அதைவிட மேலெதும்-இனிதோ சொல்-தோழி

No comments:

Post a Comment