Saturday, March 14, 2020

612. மண்மேலே(செல்லாத்தா செல்ல-மாரியாத்தா-LR-ஈஸ்வரி)**






மண்மேலே இந்த-மண்மேலே
நீ வந்திரு-சாயி தந்திடு-சாயி அன்பினை-முன்போலே
(2)
உன்போலே யார்-உன்போலே ஓர் அன்னையைப் போல்-வந்து அன்பினை ஊட்ட யாரிங்கு மண்மேலே
உந்தன்-தரிசனம் காணப்-பெரும் ஜனம் வந்ததுன் முன்னாலே 
நீ தந்த-கரிசனம் கொண்டு-தங்கள்-மனம் தேறியதுன்னாலே   
மண்மேலே இந்த-மண்மேலே
நீ வந்திரு-சாயி தந்திடு-சாயி அன்பினை முன்போலே
(MUSIC)
பந்தமெனும் சுழலிருந்து  தினம்-மாயச் செக்கிழுத்து
பந்தம் எனும் சுழலிருந்து  தினம்-மாடாய்ச் செக்கிழுத்து
வாழ்ந்திருந்தோம் மண்ணுலகில் முன்னாலே 
ஐயா வாழ்ந்திருந்தோம் மண்ணுலகில் முன்னாலே 
நீ வந்ததனை மாற்றி-உயர் ஞானமதை ஊட்டி-எமை
வந்ததனை மாற்றி-உயர் ஞானமதை ஊட்டி-எமைக் காத்தாய்-நீ  ஹேசாயி  கண்போலே  
எமைக் காத்தாய்-நீ  ஹே சாயி  கண்போலே  
மண்மேலே இந்த-மண்மேலே
நீ வந்திரு-சாயி தந்திடு-சாயி அன்பினை முன்போலே
(MUSIC)
என்றுமது நான்-எனது என்றாடும் அம்மனது
சென்று அலைந்தோடிடுமே மண்மேலே 
ஐயா எங்குமலைந்தோடிடுமே மண்மேலே
அது பாம்பாக மாறி 
(MUSIC)
பெட்டிப் பாம்பாக மாறி-எங்கும் ஓடாமல்-நின்று அடி பணியாதோ சாயிஉந்தன் முன்னாலே
உந்தன்-தரிசனம் காணப்-பெரும் ஜனம் வந்ததுன் முன்னாலே 
நீ தந்த-கரிசனம் கொண்டு-தங்கள்-மனம் தேறியதுன்னாலே  
மண்மேலே இந்த-மண்மேலே
நீ வந்திரு-சாயி தந்திடு-சாயி அன்பினை முன்போலே
போற்றி-சாயி நாதா ஸ்ரீ-சாயி-நாதா  (2)




No comments:

Post a Comment