Monday, April 20, 2020

147. நீயே சத்குரு இறைவனின் திரு உரு (மேனே சாகரு)


நீயே சத்குரு இறைவனின் திருஉரு (2)
த்வாரக மாயி ஹே சத்யசாயி
(2)
நீநாரணன் பரமேஸ்வரன் ஆனாய் (2)
நீயே பிரமனும்ஆ..னாய்
நீயே சத்குரு இறைவனின் திருஉரு (2) 
நீயே ஜீவனைப் படைத்தவனாவாய் 
அதனுள்ளே ஆன்மமும் ஆனாய் 
(2)
பார்த்தனுக்கே அருள்கீ..தையைச் சொன்னாய் 
அடைவாய் எனைச் சரண் என்றாய்
அனைத்தும்உலகிலே நீயே தானய்யா (2)
நீயே-ஆதர..வானாய் 
நீயே சத்குரு இறைவனின் திருஉரு
நிர்மல மனதில் பரவசத்துடனே நாமம் சொல்வேன் ஐயா (2)
இதயமுருகவே ஹேசாயீஸ்வரா சேவைகள் புரிவேன் ஐயா 
 வினைகள் போக்கி அன்பை ஊட்டி (2) 
அருள்வாயேகுரு நாதா 
நீயே சத்குரு இறைவனின் திருஉரு
த்வாரக மாயி ஹே சத்ய சாயி
மனம்பாகாகி நாமத்தைக்கூறி இசைத்திடும் கீதத்தை கேள்நீ (2) 
மனமே கோயில் நீயதில் தெய்வம் அருள்தர வந்திடு சாயி 
தினமும்சேவை புரிவோம்ஸ்வாமி திரும்பவும் நீ வருவாயே 
மனம் கனிசாயி அருள்தரு..வாயே
 குருவாய் நீவரு..வாயே 
நீயே சத்குரு இறைவனின் திருஉரு
த்வாரக மாயி ஹே சத்ய சாயி




No comments:

Post a Comment