Monday, April 20, 2020

152. கனவிலும் சாயி (கனவிலும் பழனி )



விருத்தம்
ஓதும் சதுர் வேதங்களின் உள்ளே கருவுமாகி
பிரபஞ்சத்தையும் கடந்து அணுவுமாகி
ஆதி பரம் பொருள் எனவே காலம் கடந்து 
அன்பாகி அங்கிங்கெனாத விதம் எங்கும் நிறைந்த  
ஜோதிச் சுடர் வடிவாக உன்னை த்யானத்தில் காண வேண்டி 
சாதனை செய்யும் மகா ஞானியர் பலர்
அவர் எப்பொழுதும் உனை-எண்ணித் தவம் இருப்பரே
-----------------------------------

கனவிலும் சாயீ எங்கள் நினைவிலும் சாயி
மனிதனாக உலகில் வந்த இறைவன் எங்கள் சாயி (2)
கனவிலும் சாயீ எங்கள் நினைவிலும் சாயி
வெங்க அவதூதர்வேண்ட மண்ணில்வந்த சாயி
மக்கள்சோகம் போக்கவந்த சொக்கத் தங்கம் சாயி (2)
கனவிலும் சாயீ எங்கள் நினைவிலும் சாயி
கண்ணாரக் கண்டிடப்பார் அப்பனான சாயி
கண்ணாஎன்றே அணைத்துத் தாயுமான சாயி (2)
கனவிலும் சாயீ எங்கள் நினைவிலும் சாயி
களங்கமில்லா அன்பைஊட்டி மாற்றம் செய்த சாயீ
அடியாரை தினந்தோறும் தேடி அருளும் சாயி (2)
கனவிலும் சாயீ எங்கள் நினைவிலும் சாயி
கூறும்போது வாய் மணக்கும் நாமம் அன்றோ சாயி 
வினையாவும் போக்குகின்ற நாமம்அந்த சாயி (2)
கனவிலும் சாயீ எங்கள் நினைவிலும் சாயி
திரும்பிடுவான் அடியார்கள் குறைகள் போக்க சாயி 
திருநீறை அளித்து வாட்டம் போக்க காக்க சாயி (2)
கனவிலும் சாயீ எங்கள் நினைவிலும் சாயி (2)
கனவிலும் சாயீ
எங்கள் நினைவிலும் சாயி

சகல லோக ஈஸ்வர சாயி பகவானுக்கி - ஜெய் 



Kanavilum Saayi (Kanavilum Pzhani)

Kanavilum Saayi Engal Ninaivilum Saayi (2)
Manidhanaaga Ulagil vandha Iraivan engaL Saayi (2)
Kanavilum Saayi Engal Ninaivilum Saayi (2)
Venga-Avadhoodhar Venda MaNNil Vandha Saayi
MakkaL Sogam Pokka Vandha Sokkath thangam Saayi
Kanavilum Saayi Engal Ninaivilum Saayi (2)
KaNNaarak Kandidap-Paar appanaana Saayi
KaNNaa enre ANaitthuth thaayumaana Saayi
Kanavilum Saayi Engal Ninaivilum Saayi (2)
KaLangamillaa Anbai Ootti Maatram Seidha Saayi
Adiyaarai Dhinandhorum Thedi arulum Saayi
Kanavilum Saayi Engal Ninaivilum Saayi (2)
Koorumbodhu Vaai MaNakkum Naamamanro Saayi
Varum Vinai yaavum Pokkuginra Naamam Andha Saayi
Kanavilum Saayi Engal Ninaivilum Saayi (2)
Thirubiduvaan AdiyaargaL kuraigaL pokka Saayi
Thiruneerai ALitthu Vaattam Pokka Kaakka Saayi
Kanavilum Saayi Engal Ninaivilum Saayi (2)

Sathya Saayi Bhagawanukki – JAI




No comments:

Post a Comment