Tuesday, April 21, 2020

156. சாயீஸ்வர சாயீஸ்வர(நாராயாணநாராயாணநாராயாணஓம்)



சாயீஸ்வர சாயீஸ்வர சாயீஸ்வர ஓம் (2)
நாவினிக்க மனமினிக்க நாமினிக்க நாடினிக்க
நாளெலாம் மறந்திருந்து பாடுவோம்
அன்புமனித ரூபமாகி மண்ணில்வந்த தெய்வம்சத்ய
சாயிநாதனைப் பணிந்து பாடுவோம் (2)
சாயீஸ்வர சாயீஸ்வர சாயீஸ்வர ஓம் (2)
ப்ரேமவடிவம் என்றழைத்து நமக்குப்ரேமை ஊட்டிவிட்ட
ப்ரேமசாயி ராமன்நாமம் பாடுவோம்
ஆத்மரூபம் என்றழைத்து நமக்குஆன்ம ஒளிகொடுத்த
ஆத்மசாயி ராமன்நாமம் பாடுவோம் (2)
சாயீஸ்வர சாயீஸ்வர சாயீஸ்வர ஓம் (2)
யமுனையாடி தினமும்நூறு லீலைகள்பு..ரிந்தசாயி
கண்ணனைப் பணிந்துபோற்றிப் பாடுவோம்
இதயகமலம் மலரஅன்பு வளரநெஞ்சில் மாற்றம்செய்த
சாயிராமனைப் பணிந்து பாடுவோம் (2)
சாயீஸ்வர சாயீஸ்வர சாயீஸ்வர ஓம் (2)
சுடும்வெயில் தகிக்கமண்ணும் பாலையாக நீரளித்த
கருணைமூர்த்தி யைப்பணிந்து பாடுவோம்
ஜகமெலாம் வியந்துபோற்றும் உடலில்வந்த நோய்கள்போக
மருந்தகத்தைத் தந்ததாயைப் பாடுவோம் (2)
சாயீஸ்வர சாயீஸ்வர சாயீஸ்வர ஓம் (2)
பாவம்போக சோகம்போக ப்ரேமையைப் பரிந்தளித்த
ப்ரேமசாயி..யைப்பணிந்து பாடுவோம்
உலகம்வந்து தினம்நடந்து தரிசனத்தில் மகிழ்வுதந்த
சத்யசாயி நாதன்நாமம் பாடுவோம் (2)
சாயீஸ்வர சாயீஸ்வர சாயீஸ்வர ஓம் (2)

கலியுக த்ரயீ அவதார சாயி பகவானுக்கி - ஜெய்



No comments:

Post a Comment