Monday, April 20, 2020

153. எங்கே சென்றாயோ ( எங்கே சென்றாலும் காணலாம்)




எங்கே சென்றாயோ சாயிராம்
எங்கு சென்று உனைத் தேடுவேன் 
எங்கும் நிறை பர ப்ரம்மமாய் 
உன்னடி காண்திறன் கொண்டிலேன்
எங்கே சென்றாயோ சாயிராம்
சித்தர்கள் வித்தையைப் பழகிலேன் 
த்யானம் ஜபம் தவம் புரிந்திலேன் 
மண்ணில்-உன் பொன்னடி காண்கிலேன்
அய்யஹோ நான்என்ன செய்யுவேன்
எங்கே சென்றாயோ சாயிராம்
நீதான் இனிகதி சாயிராம் 
பாராமுகம் இன்னும் ஏனய்யா 
பக்தர்கள் கூவலைக் கேட்டிடாய் 
இன்றே அவதரிப்பாய் அய்யா
எங்கே சென்றாயோ சாயிராம்
வேதக் கருப் பொருள் அறிந்திலேன்
அந்த ஞானம்வர ஏதும் புரிந்திலேன்
சாயி-உன் பேர்-ஒன்றே சொல்கிறேன் 
அதுவன்றி-வே..றோர்-பூஜை செய்திலேன்
எங்கே சென்றாயோ சாயிராம்

நாமா வளி (பன்ஸீதரா கன்னைய்யா )
பர்த்தீஸ்வரா-சாயீ..சா சிவரூப மங்களா
ஹே-சாயி ராம-ரா..மா ஷிரடீ..புரி-விஹாரா
சாயிராம் ஹரே சத்ய சாயிராம் ஹரே ராம்
ஹேசத்ய சாயிராம் ஹேஷிரடி சாயிராம் ஹேப்ரேம சாயிராம் சாயி
ஹேசாயிசத்யசாயி ஹேசாயிஷிரடிசாயி ஹேசாயிப்ரேமசாயி ராமா
ஹேராம-சத்யசாயி ஹேராம-ஷிரடிசாயி ஹேராம-ப்ரேமசாயி சாயி


No comments:

Post a Comment