அன்பே வடிவானாய் அருள் சுரந்தாய் சாயிநாதா
தெய்வப் பிறப்..பேதான் என்றும் இருக்கும்நிஜம் நீதான்
மண்பால் தினம் நடந்தாய் அதைக் கண்போலநீ காத்தாய்
முன்போல் அவதரிப்பாய் எமைக் காப்பாய் பெருமானே (2)
அதிகாலையின் கதிரே அந்தி வரும்சந்..திரக்குளிரே
வருவாய்விழுப்..பொருளே
ஊழ்வினைபோக்..கிடுஅருளே
எதிரே வந்துகணத்தில் குறை தீர்க்கும்திரு..வுளத்தில்
விரைந்தேஅவ..தரிப்பாய் ப்ரேமசாயிபெரு..மானே (2)
தனிமை அதுஇனிமை என்றுஉரைக்கும் பெரும்ஞான
ஒளியைக் கண்..டவரும் உனதடியைக் கண்டவரே
உருவில் உன்னைக்காண நீ பாரில் வருவாயே
நடமாடிட வருவாய் சாயி நாதப் பெருமானே (2)
உனைத்தாள் பற்றிஇருக்க திருவருள்தா பெருமானே
என்வினையா வையும்-போக்க கொஞ்சம் மனம்வைத் திடுசாயி
அணைக்கும் அன்னைபோலே ப்ரேம உருவாய் வரும்தாயே
அமுதூறுமுன் குரலில் அன்பை நீ-வந்..தளிப்பாயே (2)
இருபே..ரவதாரம்கலி யுகம்தன்..னில்கொண்..டாயே
குருவே ப்ரேம ரூபம் தனில் நீ திரும்பிடு
தாயே
வருவாய் வந்தருள்வாய் உந்தன் முகம்கண்டிட என்றும்
சேயாய் அழுதேங்கும்
எங்கள்கண்..ணீர்துடைதாயே (2)
உன்சேயாய் அழுதேங்கும் எங்கள்கண்..ணீர்துடைதாயே
தாயுமான ஸ்வாமி சாயி நாதனுக்கி – ஜெய்
No comments:
Post a Comment