சாயிதிரு நாமம்ஒன்றால் வந்தவினை ஓடிவிடும்
ஞானம்தரும்ஜோதி நன்கு சஹஸ்ரத்தில் கூடிஎழும்
(2)
சாயிதிரு நாமம்ஒன்றால் வந்தவினை ஓடிவிடும்
(MUSIC)
சுந்தரமாய் வடிவாகும் சுத்தசத்வ நாமத்தினால் (2)
வந்தயம தூதர்களும் வழிபார்த்துப் போய் விடுவார்
இந்த உண்மை நீஉணர்ந்து சாயிநாமம் கூறி வந்து (2)
சிந்தையில் அதனைவைத்து இன்பம் கொண்..டாடிடுவாய்
சாயிதிரு நாமம்ஒன்றால் வந்தவினை ஓடிவிடும்
(MUSIC)
மனம்கனிந்த சேவையிலே மேன்மை இருக்குதடா (2)
தினம்தினம் புரிவோர்க்கு மகிழ்ச்சியைப் பெருக்குதடா
கணந்தொறும் நெஞ்சினிலே சாயிநாமம் சொல்லிடடா (2)
இனித்திடும் நாமம் ஒன்றால் தெய்வம் ஒளி கூட்டுமடா
சாயிதிரு நாமம்ஒன்றால் வந்தவினை ஓடிவிடும்
ஞானம்தரும்ஜோதி நன்கு சஹஸ்ரத்தில் கூடிஎழும்
சாயிதிரு நாமம்ஒன்றால் வந்தவினை ஓடிவிடும்
No comments:
Post a Comment