வாழ்கசாயி நாமம்நெஞ்சில் நின்றுஎன்றுமே
வாழ்கசாயி நாமம்சொல்லும் நன்மனங்களே
சாயிநாமம் ப்ரணவநாதம் என்றுதோன்றுமே
இடைவிடாமல் அன்பில்நாமும் அதனைச் சொல்லவே
சாயிகீதம் நாமெப்போதும் இசைத்துஅன்பிலே
ஆயிஅப்பன் சாயிபதத்தைப் பணியவேண்டுமே
அன்புசேவை செய்துமக்கள் நோவைப்போக்கவே
சத்யசாயி தந்தபாதை செல்லவேண்டுமே
நமதுசாயி மீண்டும்ப்ரேம
சாயிவடிவிலே
அவதரிக்கப் பாடவேண்டும்
சாயிநாமமே
வாழ்கசாயி நாமம்நெஞ்சில் நின்றுஎன்றுமே
வாழ்கசாயி நாமம்சொல்லும் நன்மனங்களே
சாயிராம சாயிராம சாயிராம ராம் (2)
ஷீரடிபர்த்தி ப்ரேமசாயி பகவானுக்கி - ஜெய்
No comments:
Post a Comment