Wednesday, April 22, 2020

194. சாயீசன் திருநாமம் (நான் ஒழிந்து நீயாக )



சாயீசன் திருநாமம் சொல்வோமய்யா
ஓம்கார நாதமே நம்நா..வில் தோன்றுமே
சாயீசன் திருநாமம் சொல்வோமய்யா
தினம்நாமும்-கூடியே சாயிநாமம்-பாடுவோம் (2)
பெரும்ஞானம் தேடியே அவன்பாதம் நாடுவோம் (2)
சாயீசன் திருநாமம் சொல்வோமய்யா
ஓம்கார நாதமே நம்நா..வில் தோன்றுமே
சாயீசன் திருநாமம் சொல்வோமய்யா
வாழ்நாளில் நாம்நாளும் துன்பங்கள் பலகண்டு (2)
மனம்வாடும் வாட்டத்திற்கு அளவேஇல்லை (2)
அவையெல்லாம் நாமத்தால் நிலைக்காமல் விரைந்தோடும் (2)
நாம்பாடும் நாமம்ஒன்றே அமைதிதரும் (2)
அமைதி வந்தால் வாழ்வில் வேறொன்று எதற்காக (2)
கூறிடைய்யா-சாயி நாமம்தன்னை (2)
சாயி..பெரு..மான்தான் முதலும்முடிவும் மண்ணில் (2)
அருள்சொரிந்தே பேரானந்தம் வழங்கிடும் (2)
சாயீசன் திருநாமம் சொல்வோமய்யா
ஓம்கார நாதமே நம்நா..வில் தோன்றுமே
சாயீசன் திருநாமம் சொல்வோமய்யா

நாமாவளி
பாபா-நின் பாதார விந்தம்துணை (2)
நீதான்-வல் வினைபோக எந்தன் துணை
கோள்அணுகா துன்பாதார விந்தம்துணை
சிவரூபாஉன் பாதார விந்தம்துணை (2)

சகல லோக நாத சாயி பகவானுக்கி – ஜெய்



No comments:

Post a Comment