Wednesday, April 22, 2020

195. அன்பே உந்தன் வடிவம் உவந்தளிக்கும்(அய்யே மெத்தக் கடினம்)

அன்பே உந்தன்வடிவம் உவந்தளிக்கும்-அன்பே உந்தன்வடிவம்
சாயீச-உன்வடிவம் மெய்யானநல்வடிவம் (2)
ஹேசாயி என்பவர்க்கு கையாலே நீரளிக்கும்
அன்பே உந்தன்வடிவம் உவந்தளிக்கும்-அன்பே உந்தன்வடிவம்
தூளாகி நெஞ்சுநொந்து நூலாகி நின்றவர்க்கு
தாய்வீட்டுப்படி போலே சாயீஉன்மடி உண்டுபாரிலே
கட்டிக் காக்குமே உந்தன் நீறுமே அதுபோருமே
அன்பே உந்தன்வடிவம் உவந்தளிக்கும்-அன்பே உந்தன்வடிவம்
உன்தாளைத் தேடிவந்து அப்பாவென் றழைப்பவர்க்கு (2)
கோள்பார்வை கிடையாது அன்பாலேநீஅழைக்க
ஆடுவார் தானாய்ஓடுவார் அன்பில்ஊறுவார் இசைபாடுவார்
அன்பே உந்தன்வடிவம் உவந்தளிக்கும்-அன்பே உந்தன்வடிவம்
ஜாதிமதம் கிடையாது பேதமுந்தன் நெஞ்சில்இல்லை
உலகாண்ட மன்னர்ஏழை எல்லோரும் சமம்உனக்கு
அல்லவோ அதைநான்சொல்லவோ நெஞ்சம்துள்ளவோ இன்பமாகுதல்லவோ
அன்பே உந்தன்வடிவம் உவந்தளிக்கும்-அன்பே உந்தன்வடிவம்
நாமாவளி
என்னப்பனல்லவா என்சாயி அல்லவா (2)
தன்னைக்கொடுத்தவா என்னை எடுத்தவா
வறண்டிடும் பூமியில் மழைதரும் மேகமே
இருண்டவென் நெஞ்சிலே வந்தநல்தீபமே

போலோ பண்டாரி பாபா - சிவசிவ சாயீஸ்வரா

No comments:

Post a Comment