Wednesday, April 22, 2020

196. எனக்குன் சிதானந்த (இரக்கம் வராமல் போனதென்ன)



எனக்குன் சிதானந்த ரூபம்காட்டிடு என்சாயிராம்
எனக்குன் சிதானந்த ரூபம் காட்டிடு
வாழ்க்கைக்கடலில் நொந்தே நாளும்நைந்து வெம்பி வந்தேன்
வாழ்க்கைக்கடல் அலைவீச்சில் நாளும்நைந்து வெம்பி-நொந்தேன்
(எனக்குன் சிதானந்த ரூபம்காட்டிடு)
நாதாஇறங்கி எந்தனுயிரை காத்தருள சாயிமூர்த்தி
நாமம்தன்னை பாடிதினமும் பணிந்திடும் எனக்கேது நாதி
மொழிஉன்னருள் தேன்சிந்திடும் கேட்டிடஎன் மனம்ஏங்கிடும்
ஒளிஏற்றிநல் வழிதந்திட இப்பொழுதேநீவருவாயே
எனக்குன் சிதானந்த ரூபம் காட்டிடு
என்சாயிராம்.. சாயிராம் 


No comments:

Post a Comment