Monday, April 27, 2020

223. சாயிநாமம் சொல்லி(பாண்டுரங்கவிட்டலனைப் பாடிடுவோம்)


சாயி நாமம் சொல்லிச் சொல்லிப் பாடிடுவோம்
அந்த ப்ரேமசாயி மீண்டும் வரக் கூப்பிடுவோம்
பர்த்தியாத்தி ரைபுரிந்து சென்றிடுவோம்
அந்தசத்திய சாயிதனைக் கேட்டிடுவோம்
சாயி நாமம் சொல்லிச் சொல்லிப் பாடிடுவோம்
அந்த ப்ரேமசாயி மீண்டும் வரக் கூப்பிடுவோம்
திட்டவட்ட மாகநாமும் சொல்லிடுவோம்
கையைக் கட்டிக்கொண்டு நின்றிடாதே என்றிடுவோம்
கஷ்டங்களைத் தீர்க்கும்வேலை ரொம்பஉண்டு
அவன் இஷ்டத்துக்கு தூங்கும்ஞாயம் கேட்டிடுவோம்
நெற்றியில்வி ரலையிட்டு மூடியகண்
ஓர் சிந்தனையை செய்யாதே என்றிடுவோம்
நாங்கள் அதைப் பார்த்திருக்கோம் பர்த்தியிலே
நீ சாக்கு போக்கு தேடாதே என்றிடுவோம்
சாயி நாமம் சொல்லிச் சொல்லிப் பாடிடுவோம்
அந்த ப்ரேமசாயி மீண்டும் வரக் கூப்பிடுவோம்
நாமாவளி
வந்திடுவாய் வந்திடுவாய் சாயிநாதா
அருள் தந்திடுவாய் தந்திடுவாய் சாயிமாதா






No comments:

Post a Comment