Thursday, April 30, 2020

289. ஆடும் தில்லை நாதன்(ஆறுமுகம் காண வந்தேன்)

விருத்தம்

சீர்மிகு ஷிரடியில் பர்த்தியில் மனிதனின் ரூபம்கொண்டு சாயிராம் உலகத்தில் அவதரித்தான் அவனே சிவரூபம்என அறிந்திடுவாய் மனமே
பாபா.. சாய்ராம்..பாபா..
-----

ஆடும்தில்லை நாதன்ரூபம் தன்னைக்கொண்டவா 
அன்பில் அவதரித்தே-உள்ளம் கொள்ளை-கொண்டவா
(2)
ஆடும்தில்லை நாதன்ரூபம் தன்னைக்கொண்டவா
பாபா.. சாய்ராம்..பாபா..
 ஆடும்தில்லை நாதன்ரூபம் தன்னைக்கொண்டவா 
அன்பில் அவதரித்தே-உள்ளம் கொள்ளை-கொண்டவா
ஷிரடியிலே-இருந்து சிவவடிவாய் (2)
சீரடி..யால்தடுத்தாய் அருள்குருவாய்
உந்தன் சீரடி..யால் தடுத்தாய் அருள்குருவாய்
பர்த்தி நாதனாய் உதித்த சத்யரூபமே (2)
ஸ்வாமியென்று  பாரழைக்கும் சாயிநாதா (2)
ஆடும்தில்லை நாதன்ரூபம் தன்னைக்கொண்டவா 
அன்பில் அவதரித்தே-உள்ளம் கொள்ளை-கொண்டவா
ஆடும்தில்லை நாதன்ரூபம்..பாபா.. சாய்ராம்..பாபா..
உன்னருமை பெருமையெல்லாம் யார்எடுத்துக் கூறவல்லார் (2)
உந்தன்அதி அற்புதங்கள் தன்னின்புகழ் பாடவல்லார் (2)
யார் புகழ் பாட வல்லார் .. உன் புகழ் பாடவல்லார் 
உன்பெருமை தனையுணர்ந்து யார்புகழ் பாட வல்லார் 
அன்புரூபமே சாயி சரணம்சரணம் த்வாரக மாயி 
சத்யரூபம் ப்ரேமசாயி வாஇன்றே (2)
ஆடும்தில்லை நாதன்ரூபம் தன்னைக்கொண்டவா 
அன்பில் அவதரித்தே-உள்ளம் கொள்ளை-கொண்டவா
ஆடும்தில்லை நாதன்ரூபம் தன்னைக்கொண்டவா
பாபா.. சாய்ராம்..பாபா..
நாமாவளி
சாயிராம சாயிராம சாயிராம ராம் 
சத்ய சாயிராம சாயிராம சாயிராம ராம்
மானிடனாய் அவதரித்த தெய்வம் சாயிராம்
தேனமுதாம் அன்பளித்த தந்தை சாயிராம்
சாயிராம சாயிராம சாயிராம ராம் 
சத்ய சாயிராம சாயிராம சாயிராம ராம்



No comments:

Post a Comment