Thursday, April 30, 2020

300. கைவிடாதே சாயீசா(சரணாகதி ஸ்தோத்ரம்-கிருஷ்ண கானாம்ருதம்)


(1)
கைவிடாதே சாயீசா நீயே தந்..தை..தாய் (4) 
காசிராமசுரம் பத்ரிஅமரபுரம் என்றுசாமியைநான் தேடினேன்
அந்தசாமிஎந்தன் நெஞ்சிலான்மஒளி என்றிருப்பதுநான் காண்கிலேன்
கங்கைகாவிரியும் புனிதமாய்நதிகள் தேடியங்குநீ..ராடினேன்
பக்திநீர்வழிய அன்புத்தந்தைஉனை என்றுநெஞ்சகத்தில் நாடினேன் ?

மாயமோகவலை ஆசைப்பாசப்புதை மண்ணில்கால்புதைக்க ஓடினேன்
ரோஷவேஷத்துடன் வந்தமூடமதி தந்தஆணவத்தி லாடினேன்
காயமாயமது உண்டுநான்எனது என்றுவாய்கிழியப் பேசினேன்
மாயும்போதுஅது வந்திடாதுதுணை என்றுநான்அறியக் கூசினேன்
(2)
சொந்தமாய்மனது வந்தநான்எனது என்றதன்னுணர்வு வாட்டுது
வந்தமாயமிது செல்லுமாபிறகு திறக்குமாமனது பூட்டது ?
எந்தன்தாய்குழந்தை தந்தைஎன்மனைவி என்றஎண்ணமென்று போவது
இந்தமானுடத்தில் வந்தயாவருமென் சொந்தமென்றுஎன் றாவது ?

பந்தபாசங்களும் வந்தநேசங்களும் இந்தபூவுலகில் மாயுது
என்றஎண்ணமிது சென்றுமாய்ந்திடவே நல்லஞானம்உரு..வாகுது
எந்தஜென்மத்திலும் வந்தயாவருமென் சொந்தசோதரரே..யாவது
என்றஞானம்வர அன்புத்தந்தைஉன் அருளுக்காக மனம் ஏங்குது 
(3)
அன்புதெய்வம்என்று நன்குநான்எழுதி சொல்லினேன்எனது பாட்டிலே
அந்தஅன்புவர செய்யும்சேவைதனை விட்டுத்தூங்கினேன் வீட்டிலே
முன்புராமனுமாய் பின்புகண்ணனுமாய் வந்தஉன்அருமை உணர்ந்திலேன்
அன்புமுழுவதுமாய் கலியில்உன்வடிவைக் கண்டபின்னும்மனம் தெளிந்திலேன்

ஐயகோஎனக்கு நல்லபுத்திதரும் ஆன்மஜோதி என்றுஒளிர்வது
ஐயமோஉனக்கு எந்தன்-யோக்கியத்தில் என்றுஎன்றுநான் தெளிவது
உய்யவோர்வழியும் தோன்றிடாதுவினை வந்துவந்துஅலைக் கழிக்குது
பைய்யவாயிடினும் செய்யுவாய்அருளை எந்தன்பொறுப்புஇனி உன்னது
(4)
ஒன்று நான்கிரண்டு என்றுமூச்சுமே நன்குஆடி ஒளிகூடுமா
நன்கு நான்தொழும் உந்தன்திருவடி எந்தன் நெஞ்சில்தினம் ஆடுமா
என்றுஎன்மனத் தாடல்நிற்குமோ சென்றுசின்மயம் தேடுமோ?
நன்றுநன்றென வந்துஉன்னருள் என்றுஎன்மனதில் கூடுமோ

அந்த நாள்வரை துன்பப்பாசறை தன்னில்-வாழ்ந்திடுதல் வேண்டுமோ ?
வந்த நாள்முதல் இன்பம்என்றிதை எண்ணிச் சிறைபுகுந்த வாழ்வுமோ?
அந்த..கன்திரும்ப கொண்டுசெல்லுவதும் பின்னர்திரும்புவது மாகினேன்
சொந்தம் நீஎனது பந்தமாய்உலகு வந்துகாத்திடு சாயீசனே
(5)
மண்ணில் உன்பதங்கள் வந்துநர்த்தனமும் நூறுஅற்புதமும் செய்தது
கண்களதனைதினம் கண்டபோதும்-அகம் காரம்வந்ததனை மூடுது
அந்தகோவிந்தனை எண்ணுவாய்தினமும் என்றுசங்கரனும் சொன்னது
எண்ணிடாதுஉனைக் கேட்டிடாததனை செய்யுமென்வினையைக் கொன்றிடு

செய்தபாவங்களும் உலகமாயங்களும் வந்துவந்துபயம் காட்டுது
எந்தன்நெஞ்சம்தனில் அந்தபொன்தனமும் வந்துஆணவத்தைக் கூட்டுது
அந்தவேதங்களும் சொல்லும்தத்துவமும் எந்தன்அறிவிலெங்கு ஏறுது
உந்தன்பாதங்களை எந்தகாலத்திலும் நெஞ்சிலாடும்படி செய்திடு
(6)
எந்தன்மன்மனது தந்ததொந்தரவு நீக்குபோக்குசா-யீசனே
சொந்தமென்றுநிதம் வந்துவல்வினைகள் தருதுதருதுபாழ் சிந்தனை
சித்தம்நின்றுபதம் நன்குதண்ணொளியை வீசுவீசுமா றருளவே
எந்தனிடையும்சுழு முனையும்பிங்கலையும் ஒன்றுசேர்ந்து நடமாடுமே

என்றுஅந்தநிலை வந்துபிறவிஅலை சென்றுஓயும்சா-யீசனே
மென்றுமென்றுஎனை தின்றுதின்றுவினை கொன்றுகொன்றுவரும் மெல்லவே
நன்றுநன்றுஎனக் கண்டி..டாமலருள் வந்துதந்திடுசா-யீசனே
அன்றுஅன்றுவரை எங்கும்தாவிடுமென் நெஞ்சிலாடணுமுன் சிந்தனை
(7)
சாடுசாடுஅடி என்றுதிருமழிசை யாரும்சொன்னதிருப் பாதமே
காடுஆடுபொடி பூசிநின்றதரு கீழமர்ந்தகுரு மூர்த்தமே
கோடிகோடியுகம் கண்டபிரமனையும் தந்தநாபியுடை தந்தையே
மடுவிலாடுமொரு நாகமாடுமிரு பாதம்காட்டு சாயீசனே

கண்டிடாதபடி விண்ணிலாடும்முடி தொட்டிடாதஅடி உன்னது
எண்ணிடாதபடி செய்தகர்மவினை பட்டுவாடும்மனம் என்னது
மட்டிலாதபடி அன்புகொண்டபடி உள்ளஉன்னடியை நாடினேன்
கண்ணிலாடும்படி எந்தன்ஆன்மஒளி காட்டுகாட்டு சாயீசனே
(8)
அன்புகொண்..டிடு உதவிசெய்..திடு துன்புறுத்தலைத் தள்ளிடு
என்றசொன்னது அன்புதந்தையின் வேதவாக்குமாய் ஆகுது
காலகாலமாய் மண்ணில்ஞானியர் தந்த தத்..துவ ஞானமே
தூலரூபமாய் வந்தபிரமம்நீ சொன்ன வார்த்தையில் தோணுமே

எந்தன் பாடலில் வந்தகூவலைக் கேளுகேளு சாயீசனே
சித்தம்ஆடுகிற வெற்றுஆட்டத்தைப் போக்கு-ஈஸ்வரியின் பாலனே
எந்தன்ஊடலைப் போக்கவல்லதாய் உள்ளயா..வையினும் நல்லதே
உந்தன்கூடலால் எந்தன்ஊடலைப் போக்கிநிறுத்து என்தேடலை
(9)
எந்தன்தாய் மொழியாம் உந்தன்வாய்மொழியைச் சொல்லிச்சொல்லிநான் போற்றுவேன்
எந்தன்மாயவினை நின்றுஓயும்வரை உந்தன்திருவடியில் அரற்றுவேன்
இந்தலோகத்திலும் எந்தலோகத்திலும் உந்தன்திருமொழியே ஒலிக்குதே
அந்தஓம்ஒலியில் வந்தபொன்மொழியை எந்தன்சேய்மொழியில் பிதற்றுவேன்

நான்குவர்ணத்தவன் அந்தநந்தனவன் சொன்னமந்திரமும் என்னது
அந்தகண்ணப்பனும் தந்தமாமிசமும் நல்லஅர்ப்பணமும்ஆனது
பொங்குமன்பினொடு வந்தபாசத்துடன் செய்யும்சேவையது வானது
கந்தசந்தனமும் தங்கம்பட்டுடையும் கொண்டமந்திரத்தை வெல்லுது

 சொல்வளத்தினொடு நல்லமந்திரத்தை சொல்லும்கல்மனது..மானது
நல்திறத்தினொடு *மின்கணக்குமென சொல்லும் யந்திரம் போலானது  
கொண்ட வேஷங்களும் மந்த்ரபாஷைகளும் அன்பினால்-முழுமை ஆகுது
நெஞ்சபாசத்துடன் நொந்தஏழைகளின் துன்பம்போக்கஅவை பலிக்குது
*மின்கணக்கு = மின்னல் வேகத்தில்

(10)
*விண்டிடாதவனைக் கண்டிடாதவனை வழிகொடுக்கும் குருவென்பது
கண்ணிலாதவனும் *விண்ணிலாதவனைக் கண்டுசொல்லுவது போலது
*அன்பின்சாதனையில் கொண்டவேதனையில் வந்துதெய்வம்குருவாகுது
பின்புசோதனையில் வந்தபோதனையில் ஆத்மஞானம்உரு வாகுது

*விண்டிடாதவன்=சொற்களால் வரையறுத்துச் சொலப்படாத இறைவன்
*கண்டிடாதவனை - இறைத்தன்மையை அடையாளம் கண்டு கொள்ள இயலாதவனை
*விண்ணிலாதவனை = விண்ணில்+ஆதவனை
 **அன்பின்சாதனையில் கொண்டவேதனை = த்யாகம்

கெட்டிப்பாலமுதும் சொட்டும்தேனதுவும் நித்தம்அவிசொரியும் யாகமும்
செய்து வரத்தைப்பெற  நித்தம்மந்திரமும் சொல்லிநிற்குதுபா ராலயம்
அன்புப்பாலதையும் பண்புத்தேனமுதம் அவியுமாக்குமொரு ஆலயம்
சென்றுநாமும்தொழ என்றுதோன்றுமென நாளுமேங்கியது குவலயம்

அந்தவேதனையைக் கொன்று-சாதனையை அன்பில்வந்து அதைஊட்டவே
இந்தகுவலயத்தில் எந்தஆலயமும் கொண்டிடாத இறையாட்டமே
பந்தமாயங்களைப் போக்கிப் பாரிலுயர் ஆன்மஞான வழிகாட்டவே
சத்தியத்தின்வடி வத்தில்வந்தது நித்தி-யத்தைநிலை நாட்டவே

சத்தியத்தின்வடி வத்தில்வந்தது நித்தி-யத்தைநிலை நாட்டவே
கைவிடாதே சாயீசா நீயே தந்..தை..தாய் (2)

------------------------------------------

Surrender to SAI.
1)
Forsake me Not.. SAAYEESAA ! Thou art my Father; Thou art my Mother...!
I was searching for You in Kasi,Badri and Amarnath,
But have not understood that you are in my heart as the effulgent soul.
I took a dip in holy rivers viz Ganga and Kaaviri,
But, Lo! I haven't shed tears of devotion & love and looked for you-my Father, in my heart.
I was keen on getting trapped in the muddy sludge of desire owing to Maya.
I lost control of myself and behaved like a proud brat out of ignorance and ego.
I was too intoxicated of the wine of Youth-power and bragged "I", "ME", "MINE".
Lo! I Did not even want to understand that those worldly-bodily power will not accompany me when I die.

2)
The ego induced feeling of I and Mine tortures me.
Will this mayaa induced ignorance go away and will my heart open to truth.
When will the selfishness like "my mother,my kids,my father and my wife" go away ?
When will I get the thought of oneness that all the humans in this world are my family?
My heart longs for this universal consciousness to manifest in me.
My heart prays to you my Lord SAI for your grace for such a wisdom.

3)
I wrote that Love is God and God is love in my songs.
But slept at home without doing the Seva that you taught .
How will I get the love in my heart? Oh SAI !
I haven't yet understood your true greatness oh SAI!,
the one who descended on earth as Rama and Krishna.
I haven't been cleared of my ignorance even after experiencing & Seeing you, walking on earth in this Kali Yuga as SATHYA SAI.
Oh..my Lord! When will I be cured of my ignorance ?
Do you still have doubts in my deservedness of your grace?
It is alright, take your time to bless me, but bear in mind that it is your duty to resurrect me from my ignorance.

4)
When will my breath be in control as indicated in Yoga Sastra?
When will your divine lotus feet manifest in my heart and 
visible ever in it for me to prostrate?
When will the vagaries of my mind stop and When will it search for the truth by your grace ?
Till such time , am I to suffer in the prison of body ? !
I have been through the cycles of birth and death ceaselessly.
Oh.. SAI, till it stops, please descend on earth and save me!

5)
Your divine lotus feet walked on earth and performed 100s of miracles for the eyes to see; Yet the Ego hinders my intellect and drowns me in Maya.
The great Aadhi Shankara said "Bhaja Govindam" ( Think of Govinda);
But my samskaras do not allow my mind to do so even for a minute.
Please help control that monkey mind and channelize it on you
The sins(bad karmas) I committed and the worldly desires
impact my life and scare me often.
My Ego dances without control on my mind going after worldly wealth.
My mind does not heed to good advises given in Vedhaas and scriptures.
Oh.. Lord SAI!, Please , Please ... do make my heart to ever think of your divine feet!

6)
Please relieve me from the troubles that my decaying mind gives.
It always pesters me,as my company,with useless thoughts.
When you bless me with a chitta that shines with your grace,
the ida and Pingala Naadis will dance energized in synchronization.
When will you bless me with that state so that my birth-death cycle ceases.
My karma is chewing me and killing me slowly.
Don't stand and watch my plight without doing anything.
Please come and bless me.
Till that happens atleast keep my heart soaked with your thought ever!

7)
Hey SAI, you are the one whose divine feet was glorifed in his hymns by Thirumazhisai Aalwar.
You are the Guru Dakshinamurthy who is enshrined under the tree to give us wisdom.
You are verily the Maha Vishnu, whose navel gave birth to Lord Brahma who lives millions of Yuga.
Your feet is so rare to be sighted and touched.
But my mind is so far from it wandering in pain because of my karma.
I always think of your divine feet with love that I know of.
Please show my soul in my eyes ! Give me the ultimate Gnaanaa.

8)
"Love all Serve All"; "Help ever Hurt never"
These are your gospels for humanity.
The wisdom that is found in the preaching of innumerable Gnaanis,
Who have been on earth from time immemorial, is given in simple words by you!
Oh SAI..! Please listen to the cry of anguish expressed through my songs,
Please do stop the wanderings of my mind, oh Easwari's son!
You are the one that can alleviate the pains of my longing.
Please do conclude my search by blessing me with Moksha!

9)
Your words are my mother tongue using which I will say hymns of praise on You!
I will keep languishing at your feet till you stop my maya!
Only your words are heard in all the worlds of the universe.
Your golden words emanate out of Your vioce viz. the Pranava Sound.
I will always keep blabbering those sacred words in my childish voice .
I don't know any other sacred mantra.
With what mantra did Nanda who does not know scriptures attained moksha?
Your devotee Kannappan offered you the animal flesh which was accepted by you willingly.!
You only said that the hands that serve are holier than the lips that pray.

10)
How can I accept any other who is not self realized as my guru to show me the path? It will be like a blind man leading another!
The sadhana done in love begets God as guru.
Then comes the Atma Gnaanaa given by such a guru which is verily you for me!
In this world of Kali that focuses on materialism,
Commoners and wise people longed and languished in anguish as to when will God descend.
Oh! SAI, you answered the prayer by descending on earth and alleviated the pain.
Oh! SAI, You descended on earth love personified and transformed millions of hearts which has not been seen on earth thus far!
Oh SAI, You descended on earth to give us all Atma Gnaanaa!
Oh SAI, You descended on earth in the name of Truth to establish dharma and give us all Sat Chit Aananda!
Oh.. Lord SAI!, Please , Please ... do make my heart to ever think of your divine feet!
Forsake me Not.. SAAYEESAA ! Thou art my Father; Thou art my Mother...!




No comments:

Post a Comment