Thursday, April 30, 2020

311. பாஹி பாபா(ஸ்ரீ கணேசா சிவுனி குமாரா)



பாஹி பாபா பாஹி *ப்ரமோதா
அகணித மகிமப்ரபோ ப்ரபோ ப்ரேமஸ்வ ரூ..பப்ரபோ     
தீ...ன நாதா அபயப்ரதாதா (3)
என்கதி நீயென நம்பினேன் சதா
வாவா இறைவா தயைபுரி விரைவாய்
பாஹி பாபா பாஹி *ப்ரமோதா
அகணித மகிமப்ரபோ ப்ரபோ ப்ரேமஸ்வ ரூபப்ரபோ
இப்புவி வந்திடு சத்திய ரூபா (3)
பக்தரின் நெஞ்சினை ஜெயித்த சாயிராம்
புத்தித் திறமெலாம் அளிப்பதாரையா
பாஹி பாபா பாஹி *ப்ரமோதா
அகணித மகிமப்ரபோ ப்ரபோ ப்ரேமஸ்வ ரூபப்ரபோ
நன்மன சதனா திக்கு நீயே தான் (3)
மங்குவதா உன் அருள் ஒளி இறைவா
அக்கறையோடெனை ஆதரிக்கவா
பாஹி பாபா பாஹி *ப்ரமோதா
அகணித மகிமப்ரபோ ப்ரபோ ப்ரேமஸ்வ ரூபப்ரபோ
சுஸ்வரம் பாடுவோம் நெஞ்சினில் கனிவாய் (3)
கொஞ்ச நேரம் இதைக் கேட்டிட வருவாய்
பஞ்சலர் பாதா ஹ்ருதய நிவாசா  
பாஹி பாபா பாஹி *ப்ரமோதா
அகணித மகிமப்ரபோ ப்ரபோ ப்ரே..மஸ்வ ரூ..பப்ரபோ
ஷீரடிவாசா பர்த்திநிவாசா (3)
விரைவில் வந்தெமைக்காத்திடு ஈசா
அருள் தர வருவாய் த்யானப்ரகாசா
பாஹி பாபா பாஹி *ப்ரமோதா
அகணித மகிமப்ரபோ ப்ரபோ ப்ரேமஸ்வ ரூபப்ரபோ
ஸ்ரீசாயீசநின் பாதபங்…கஜம்தனை (2)  
நான்என் சிரசினில் சூட்டிடும் நாள்வரை
இருந்திடுவேனா விரைந்து-நீ வாவா    
வந்திடு பாபா
பாஹி பாபா பாஹி *ப்ரமோதா
அகணித மகிமப்ரபோ ப்ரபோ ப்ரேமஸ்வ ரூபப்ரபோ

*ப்ரமோதா = ஆனந்த மயமானவனே






No comments:

Post a Comment