Thursday, April 30, 2020

313. ஸ்ரீசாயி ராம நாமம் (பகவானு ஆரியோங்கோ-மராத்தி பஜன்)



குறிப்பு
( இறை உணர்வையும் சனாதன தர்ம உணர்வையும் தூண்டிய இந்தப் பாடல் மராத்திய மண்ணில் அழியாப் புகழ் பெற்றதாகும் )

ஸ்ரீசாயி ராம நாமம் நமைக்காக்கும் தாயைப் போ..லே (2)
மெய்கண்ட சாது ஞானியர் தவசாதனை அதானே (2)
ஸ்ரீ சாயி ராம நாமம்
(MUSIC)
ஸ்ரீ சாயி நாமம்-கண்டே ஓடும் கலிப் பிசாசே (1+SM+1)
காணாமல் ஓடிப்போமே அகங்காரம் என்ற தூசே
நாம் காண ப்ரம்மஜோதி தரும்-நாமம்  சாயி சாயி
நாமம் விடாதேடாநீ என்றாரே சாயி ஸ்வாமி
அதுவே தரும்ஆனந்தம் (2)
சொல்வோம் அதை விடாதே
ஸ்ரீசாயி ராம நாமம் நமைக்காக்கும் தாயைப் போ..லே (2)
மெய்கண்ட சாது ஞானியர் தவசாதனை அதானே (2)
ஸ்ரீ சாயி ராம நாமம்
(MUSIC)
நம்-சொந்த நண்பரெல்லாம் நன்றாக வாழும் போதே (2)
சுகபோக செல்வம் எல்லாம் போகுமே  இளமை-போலே
இகவாழ்வு சுகத்தின் மேலாய் அது காட்டி..டும்இப்போதே
அதை விடுத்து இந்த உலகில் பிறயாவும் வீணில் வீணே     
ஸ்ரீசாயி ராம நாமம் நமைக்காக்கும் தாயைப் போ..லே (2)
மெய்கண்ட சாது ஞானியர் தவசாதனை அதானே (2)
ஸ்ரீ சாயி ராம நாமம்
(MUSIC)
மெய்யென்றுவந்த பகவான் மெய்கொண்டுகொண்ட நாமம் (2)
கஜராஜன் சொன்ன நாமம் பவமான சுத்த நாமம்
பாஞ்சாலி தன்னின் மானம் பாய்ந்தோடிக் காத்த நாமம்
எது வந்தபோதும் காக்கும் நம் ராஜராஜன் நாமம்
திருஞானப்பால் தரும்தாய் (2) ஒரு சாயி நாமம் தானே
ஸ்ரீசாயி ராம நாமம் நமைக்காக்கும் தாயைப் போ..லே (2)
மெய்கண்ட சாது ஞானியர் தவசாதனை அதானே (2)
ஸ்ரீ சாயி ராம நாமம்
(MUSIC)


No comments:

Post a Comment