பகவானே சாயிசாயி வருவாயே ப்ரேம சாயி (2)
பிறந்தே முகத்தைக் காட்டிடு என்நிலையை யோசி தாயே (2)
பகவானே சாயி சாயி
(MUSIC)
ஸ்ரீராமக்ருஷ்ணஉருவே
யுகம்தோறும் தோன்றும் இறையே (1+SM+1)
பவதுன்பம் யாவும்-அறவே விரைவாகப் போக்கும்-குருவே
நீயன்றோ எங்கள் மாயி வருவாயே ப்ரேம சாயி
ஹே ஷீரடிபர்த்தி சாயி வரும் நாளைக் கொஞ்சம் யோசி
உன் பதமன்றோ சிதானந்தம் (2)
அதைக் காட்டு சாயி சாயி
பகவானே சாயி சாயி வருவாயே ப்ரேம சாயி
பிறந்தே முகத்தைக் காட்டிடு என்நிலையை யோசி தாயே
பகவானே சாயி சாயி
(MUSIC)
உன் நாமம் வேத..மேதான் உன்பாதம் போத..மேதான்(1+SM+1)
திரு ப்ரும்மசக்தி வருமே அதுஜன்ம முக்தி தருமே
இருள் போக்கும் கோடி சூர்யா மருள் நீக்கும் மனித காயா
வருவாயே சாயி நாதா தருவாயே ப்ரேமை யேதான்
பிறந்தே முகத்தைக் காட்டிடு (2)
என் நிலைமை யோசி தாயே
பகவானே சாயி சாயி வருவாயே ப்ரேம சாயி
பிறந்தே முகத்தைக் காட்டிடு என்நிலையை யோசி தாயே
பகவானே சாயி சாயி
(MUSIC)
ஒயிலாக
நடக்கும் எழிலே அருள்தாகம் அடக்கும் பொழிலே(1+SM+1)
பொய்யே இலாத மெய்யே நீகொள்ளு மெய்யின் மெய்யே
பவதுன்பம் போக்கு பாதா பிறந்தே உலாவு நாதா
ஹேஷிரடி சத்யநாதா வருவாயே ப்ரேம மாதா
பிறந்தே முகத்தைக் காட்டிடு (2) என் நிலைமை யோசி தாயே
பகவானே சாயி சாயி வருவாயே ப்ரேம சாயி (2)
பிறந்தே முகத்தைக் கட்டிடு என்நிலையை யோசி தாயே
பகவானே சாயி சாயி
No comments:
Post a Comment