Thursday, April 30, 2020

315. நாம்சிறக்க தான்வழங்க(நாவினிக்க மனமினிக்க)


நாம்சிறக்க தான்வழங்க தாள்விளங்க பாரிருக்க பாரதம் பிறந்துவந்த சாயிராம்
சாயிராம்
தெய்வமனித தேகமாகி சாயிராமநாதனென்று வந்தஅன்புத் தந்தை எங்கள் சாயிராம்
சாயிராம்
பனிகிடக்கும் ஹிமச்சலத்தில் ஒளிகொடுத்து கமகமக்கும் நீறணிந்த சிவனின் ரூபம் சாயிராம்
சாயிராம்
கணங்கள் ஆயிரங்கள்செய்யும் புனிதசேவை ஏற்றல்விட்டு நமக்குச்சேவை செய்யவந்த சாயிராம்
சாயிராம்
சுடும்வினை தணிக்கக் கண்ணில் அருள்சுரக்க கைஉயர்த்தும் கருணைஅன்புத் தந்தைஎங்கள் சாயிராம்
சாயிராம்
கரத்திலூறும் நீறுகொண்டு மனதில்-மாற்றம் புரிந்துஅங்கு புகுந்துகொண்ட  மாயக்கண்ணன் சாயிராம்
சாயிராம்
தேவனல்ல முனிவனல்ல யோகியல்ல மண்நடந்த மனிதரூபத் தெய்வம்எங்கள் சாயிராம் …. சாயிராம்
திருப்படத்தில் நீற்சுரந்து ஒருகணத்தில் நமதுளத்தை நெகிழவைத்த பர்த்திநாதன்  சாயிராம் .. சாயிராம்
பவமெலாம் ஒழிக்கும் சுத்தசத்தியத்தின் ரூபமான உலகெலாம் மகிழ்ந்து போற்றும் சத்யசாயிராம்
உலகனைத்தும் ஒருகணத்தில் புகுந்துநின்ற ப்ரணவநாதம் ஓம்நமோ சாயீஸ்வராய ஓம்நமோ நமோ
ஓம்நமோ சாயீஸ்வராய (3) ஓம்நமோ நமோ (repeat)



No comments:

Post a Comment