Thursday, April 30, 2020

325. சிவரூப சாயி (குறையொன்றுமில்லை)


சிவரூப சாயி ஹேப்ரேம மாயி அடியாரின் புகல்நீ சாயி
உலகெங்கும் நீயே தானே தாயே
(2)
கண்ணுக்குக் கண்ணான சேயன்றோ சாயி 
சொல்லுக்குள் அடங்காத அன்பே நீ தாயே 
சிவரூப சாயி ஹேப்ரேம மாயி
வேண்டுதல் வேண்டாமை இல்லாமல் நீ இருந்து 
வேண்டியதைத் தருகின்ற ஹே ப்ரேம சாயி 
ஹே சாயி ஹே சாயி ஹே ஹே ஸ்வாமி 
(Short Music)
*பவமான ஹே ப்ரேம சாயி சாயி 

பவமான ஹே ப்ரேம சாயி
அன்பின் உன்ரூபம் வாய்மையே மட்டுமே சாயி  
(2)
*என்பாலும் அருள்செய்த குணக்குன்றே சாயி  (2)
குன்றைஓர் குடையாக்கி நின்றவன் நீதான் (2)
 சிவரூப சாயி ஹேப்ரேம மாயி (2)
 (SHORT Music)
சொல்லினாலே கிறங்கி சொல்லிலே மயங்கி 
பித்தாக உன்னிடம் நிற்கின்றோம் சாயிமா
(2)
சிவரூப சாயி ஹேப்ரேம மாயி
 பாரை  மறக்காமல் அருளம்மா (2)
உன்தாளே என்றும் புகல்கொடுக்கும் 
தாயின் மடி மண்ணில்
உன்னை அடைந்திட வேறுபுகல் எதற்கு (2)
உந்தன் அருள்போதும் ஹேப்ரேம சாயி  (2)
ஹே சாயி என் சாயி என் தாயே என் ஸ்வாமி 
என்சாயி.. என்சாயி.. என்சாயி.. என்சாயி..
சர்வ லோக நாயகி சாயி மாதாக்கி - ஜெய்

*பவமான = That which flows & purifies
*என்பாலும் = சிறியேனான என் பாலும், / 
உன்னில் இருக்கும் கடினமான என்பும் அருள் செய்யும் மென்மையானது




No comments:

Post a Comment