Thursday, April 30, 2020

329. சாயிநாமம்-போல் (ராம மந்த்ரவ ஜபிசோ-புரந்தரதாசர்)


சாயிநாமம்-போல் வருமோ ஹே மனிதா (2)
சொந்தங்கள் பந்தங்கள் மெச்சிடும் தன மெல்லாம்
பாப வினைகள் தன்னை போக்கிடுமா ஐய்யா
(சாயிநாமம்-போல் வருமோ ஹே மனிதா)
சகல உலகத்திலும் அதற்கு இணையும் உண்டா
சாயி நாமமே தரும் பாதை நன்றாய்
சச்சிதானந்தம் தனை இன்றே தரும் சிறப்பாய்
சிதம் தனில் நிரந்தரன் பதம் தரும் அதே அன்றோ (2)
(சாயிநாமம்-போல் வருமோ ஹே மனிதா)
சாயிநாமம்-போல்
சாயி..
நாமாவளி
(R: ராம நாமம் சொல்வதே கலியில் கதியாம்)
சாயி நாமம் சொல்லுவோம் சாயிராம் சாயிராம்
அதை-மறப்போர்க்கும் அதுவே கதியாம்
அதைமறுப்..போர்க்கும் தருமே கதியாம் 
சாயி நாமம் மெல்ல-மெல்ல உண்மை விளக்குமே (2)
பாவம் விலக்குமே
தாவரங்களும் காற்றினில்-தினம் ஸ்வாசிக்கும் ஓம்அதே
சிவசக்தி ரூபம்-ஒன்று சேர்ந்து-கொண்ட நாமமாம்
முரண்டிடும் மனத்திலும்  மாற்றம் புரியுமாம்
சாயிநாமம் சொலலித்தினமும் சேவை செய்யுவோம் (2)
சேவை செய்யுவோம்
கல்லைப் போன்ற நெஞ்சமும் பஞ்சாய் ஆகுமாம்
சாயி நாமம் சொல்லுவோம் சாயிராம் சாயிராம்
அதை-மறப்போர்க்கும் தருமே கதியாம்
அதைமறுப்..போர்க்கும் தருமே கதியாம்
சாயிராம.. சாயிராம (n)




No comments:

Post a Comment